முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  பெற்றோல் (இப்போதைய 'தலையங்கம்”)
சேனன்
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனிகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

இந்தக் கதை சொல்லப்படுவதற்கோ வாசிக்கப்படுவதற்கோ அல்ல. இது பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. ஆகையால் இக்கதையில் சேர வேண்டியவை - சொல்லப்படவேண்டியவை - வாசிப்பின் சிரமங்கள் பற்றிய வேதனைகள் - வசிக்க முடியாதுள்ள குறைபாடுகள் - குறிப்புகள் - திட்டுகள் - சித்திரங்கள் - படங்கள் - என்று அனுப்பக்கூடியதுகளை அனுப்புங்கள். எல்லாம் இக்கதையில் சேர்த்துக்கொள்ளப்படும்.


1. மண்டைக்காய் மணி

தலைவர் ஒவ்வொருவருக்கும் செய்தி அனுப்பினார். அந்த கு.ஏ 22 கீழ் 20ம் நூற்றாண்டு மரபியற் குடும்ப கட்டமைப்புக்கள் அனைத்தும் குறிக்கப்படுவதை பயிற்றப்பட்ட மாணவர்கள் புரிந்து கொள்வார்கள்.

மாணாக்கர்களாக அன்றி மீண்டும் உங்களை மக்களாக்குவோம் என்ற எதிர்ப்பறிக்கையும் சுற்றுக்கு வந்தது.

எதிர்காலத்துக்கு அட்டவணையில் இடமில்லை. சிறுத்த சொற்கள் மூலமாகவே -‘தங்கத் தலைகளுக்கு’ போட்டியிடுபவர்கள் எதிர்ப்பறிக்கை சுற்றுக்கள் மூலமாகவே மாணாக்கர்களை சென்றடைந்தனர். அனைத்து முதலுரிமைகளும் இருப்பதால் குறியீடுகள் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.

ஒவ்வொருவரும் உயிர்ச்சீட்டுகள் மூலமாக தரநிர்ணய கோட்பாட்டைப் புரட்சிகரமாக மாற்றியமைக்கும் முயற்சியில் மூழ்கிக் கிடந்தமையால் முக்கிய ‘மண்டைக்காயான’ மணி விடுமுறையை விரும்பி வந்தவன்.

மாஜி அரசியல்வாதியாகவும் தலையாய மாணாக்கனாகவும் இருந்த மணி திடீரென வெறிகொண்டு சக்திப் பிரிப்பு கோட்பாடுகளுக்குள் குதித்துச் சிந்திக்கத் தொடங்கினான். இலக்கான பேச்சுக்கள் எல்லாவற்றிலும் இது மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று தெரியாமல் தங்களின் உலகத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள் அனைவரும்.

வெறும் மண்டைக்காயாய் இருந்த மணிக்கு சிந்தனை முறிவு வந்தது.

உயிரழிக்கும் செயற்பாட்டின் பல்வேறு வடிவங்களுக்கு தேவையான பண்டங்களை வழங்குதல் முதலானவை ஒரு சுழற்சியில் நிகழ்வதாகக் கொண்டிருந்த பண்புக்கு மாற்றங்களை அவன் கண்டு பிடித்தான். ஒரு என்ற தத்துவக் குறியை விரித்தறிவித்தான்.

மரபை மீட்டல் என்பது ஒரு மண்டைக்காய்க்கான குணமல்ல என்பது இச்சமூக சுழற்சியை அறுக்காமலிருக்க செய்த சூழ்ச்சி என்று சுழல் தரிப்புச் செய்தான். மீட்பைப் புதுசு என்று அறிவிப்பதை தூக்கி எறிந்துவிட்டு அட்டவணையின் மாணாக்கனாக மரபின் புரட்சியை வரலாறு என்று வரையறுத்தான். இதைச் செய்துகொண்டு அவன் எப்படி சுழற்சிக்குள் இருப்பது?

“முன்பு நடைபெற்ற புரட்சிகள் தங்களுடய உள்ளடக்கத்தை தாங்களே முனைப்பில்லாமல் செய்வதற்காக உலக வரலாற்றில் கடந்த கால சம்பவங்களை நினைவு கூர்ந்தன.” –சொன்னது மாஜி பிரதிநிதி.

மரபின் புரட்சியை வரலாறு என்பதற்குள் நிகழ்த்த மாணாக்கர்களுக்கும் மக்களுக்குமான வேறுபாட்டை இரகசியமாக தன் மண்டைக்குள் தெரிந்து கொண்டான் மணி.

“இரை தூண்டுதல் நிகழ்த்த முடியாது. ஏனெனில் அட்டவணை நாகரீகமானதாகும். நிகழ்வை பரிகசிக்கும் கதை வேண்டாம்.” என்றெல்லாம் சொல்லிப்பார்த்தும் மசியவில்லை மணி.

மண்டைக்காய் மணி மரணப்படுக்கையில் பேசியதுபற்றி இங்கு பேசவேண்டும். ஆனால் அது கடைசி அத்தியாயத்துக்கான இரகசியமானதால் அல்லி பற்றி கிசுகிசுப்போம்.

அல்லி முழங்கால்களுக்குக் கீழ் கால்கள் இல்லாதவள். முழங்கால்களில் கட்டிய நீண்ட இரும்புத்துண்டுக்கு பெரும் குதியுள்ள சப்பாத்துப் போட்டு எல்லா ஆண்களிலும் பார்க்க வளர்ந்தவளாக குத்திக்குத்தி நடப்பவள்.

அல்லி - மணி - போலி மற்றும்; மதி போன்றோர் உரையாடிக்கொண்டிருந்த இன்றைய நாளில் உணர்ச்சிவசப்பட்ட மணி அல்லியின் இரும்பை தடவிப் பார்த்தான். உக்கிரம் புரக்கடிக்க வசனம் திக்கிய மதி டேய் ஏலுமென்டா மிதி பாப்பம் என்று தன் முதுகைக் காட்டினான். அவனது மண்டையில் தனது மண்டையால் ஒரு இடி இடித்தான் மண்டைக்காய்.

என் பெயர் மண்டைக்காய் மணி தெரியுமா என்றான்.

‘ஐயா ஜயா’ என்று கத்தினால் அல்லி. ‘போதும். சப்பாத்தின் உணர்வின்றி வாழ்ந்த காலம் போதும். நானும் மிதியுணர வேண்டும்’ என்றாள்.

‘நீ மூச்சுவிடாமல் செய்தல் வேண்டும்;’.

மதியின் நண்பன் ராஜபக்ச! –அவளுக்குத் தெரியும்.

‘முடியிறக்க வேண்டும். உங்கள் கனவுகளை உடைக்க வேண்டும். விடிகாலையில் மண்டைகளை மோதிக்கொண்டிருக்கும் நீங்கள் இரத்த விடாயால் இயக்கப்படுகிறீர்கள்.’

அவள் சொல்லிக் கொண்டிருக்க ‘எங்கே என் தேத்தண்ணி’ என்று கேட்டவண்ணம் இடை நுழைந்தான் ராஜபக்ச. ‘ஆ’ என்று கிரீச்சிட்டால் அவள். ‘வா உன் விடாய் பற்றியும் பேசிக்கொண்டிருந்தேன்.’ என்று தன் ஒருபக்க இரும்புக்காலை கதிரையில் தூக்கி வைத்தபடி அல்லி மீண்டும் அலறினாள்.

‘என் பாவாடையின் ஒற்றைப் பையை நிரப்பிய கடவுள்களுடன்

சின்னக் கால்களில் நடந்த காலத்திலேயே நானும் சில்வியாவைப் போல் நீயாக இறக்கும் காலத்தின் முன் உன்னை கொல்ல விரும்பினேன்.

பீதி பரந்த நிலமெங்கும் உன்னை காணத் திரிந்தேன்.

உனது நாக்கில் -யுத்தம் -யுத்தம் -யுத்தம்.

எங்கும் செம்மை பரப்பும் யுத்தம். யுத்த நகரத்தின் பெயர் எல்லோருக்குமான பொதுப் பெயர்தானே.

உன்னுடன் பேச எனக்கு மொழியில்லை. ஆனால் உன் பேச்சும் மொழியும் என் தொண்டையில் சிக்கிக்கொண்டுள்ளது.

கால்களை இரும்பாக்கியுள்ளது.

முள்வேலிகளில் இருக்கும் கூடாரங்களில் உரத்துப் பேசப்படுகிறது.

பேசத்தெரியாமல் அவர்கள் எல்லாம் நீயென்று நம்பினேன்.

இதோ வந்து நிற்கிறாய் தனியாளாக.

என்னை அகதிப்படுத்தும் உச்சி விளையாடும் எந்திரத்தை ஏவி விடுகிறாய்.

உனக்காக வாழ்தலே என் இருத்தல் என்று சிந்தித்தேன் - உண்மையில் உனக்காகவே வாழ்கிறேன். எல்லோருக்கும் ராஜாக்கள் மேலும் ராஜகுமாரர் மேலும் காதல் உண்டுதானே. எல்லோருக்கும் பாசிஸ்டுகள் மேல் காதல் வருவதுண்டுதானே.

அந்த கடினம் - கொடூரம் காதல் உருவாக்கக் கூடியது தானே.

உனக்கு என்றுமே பயந்திருப்பேன். உன் மிடுக்கை ஆரிய மிடுக்கென்றாய் - ஆ..... - இனம் இப்படியா வேறுபடும்.

இப்போதைக்கு உன் கட்டவுட் மேல் காதல் செய்யச்சொல்கிறாய். ஆகையால் என் இரும்புக் கால்களால் சிந்திப்பேன். அங்கு உறிஞ்சிப்பார் இரத்தம்.

எல்லோருக்கும் தெரியும் நீ நீதான் என்று. வா வா மண்டைகளை மோதலாம்.’ என்று அல்லி சில்வியாவின் மொழியில் உளறினாள்.

ராஜபக்ச தேத்தண்ணி மேசையை எட்டி உதைத்தான். மண்டைக்காய் மணியின் கன்னத்தில் எட்டிப் பளார் என்றொரு அறை விட்டான். எனக்கு முன் உனக்குத் திமிர் வரக்கூடாதென்றான்.

தேத்தண்ணியைக் காவி வந்த மகிந்த வெளிறிப் போய் நிற்க- மதி ஓடிப்போய் அவன் பின்னால் ஒளிந்து கொண்டான். உனக்கு ஒரு வாரத் தவணை மட்டுமே என்று மதியை நோக்கி விரலை நீட்டினான் ராஜபக்ச. இதோ இப்பவே கிளம்பி விட்டேன் என்றான் அவன்.

‘இவன் கனவைத் தேட நீ கிளம்புகிறாய். உன் நிழலைப் பாதுகாக்க நான் வரவா?’ என்றாள் அல்லி.

தேக்கம் கொண்டிருந்த மண்டைக்காய் மணி பாய்ந்தான். ‘மதி விழுவான் ஒரு கிழமையில்! பீதிப் பிரதேசத்தில் திரிந்துவிட்டு வருவான். உம் தூண்டிலை நீர் இழக்கக்கூடும். திரும்பியபின் வெட்டுவது வெறும் விளையாட்டு இப்பொழுதே கட்டி அனுப்புங்கள்’ என்று மதியுரைத்தான். மரபைப் புதிய புரட்சிக்கண்களால் புரிந்து கெண்டவனல்லவா அவன்.

பின்வரும் திட்டம் முடிவெடுக்கப்பட்டது.

அல்லி தூரத்தில் இருந்து துரத்தப்படுவாள். அவளைப் பின்தொடர்ந்து மதி கனவுகளைக் கண்டுபிடித்துத் தொகுத்து மீட்டு வருவான். கனவுகள் எப்படியிருக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கையிருந்தது! ஒரு கிழமைக்குள் அவன் திரும்பி வராவிட்டால் மண்டைக்காய் அடுத்த சுற்றுக்குள் தங்கத் தலையாக்கப்படுவான். அவனது முதற்பணி மதியின் மண்டையில் குத்துவதாக இருக்கும் என்று முடிவானது.

அனைவரும் இதைச் சந்தோசத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்.

கதவுகள் திறக்கப்பட்டன --- காவலர்கள் விலத்தி நின்றார்கள் --- வெளியின் வெளிச்சம் விழுந்து சிறைக்கதவுகளும் கம்பிகளும் பலருக்கும் தெரிந்தது --- கனவுகளைத் தேடிய பயணம் தொடங்கியது --- அல்லி ஓடத் தொடங்கினாள்.

(தொடரும்)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>