முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனிகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

ஜெயகாந்தனின் ‘பொம்மை’

சிறு பிராயத்தில் பொம்மைகள் நம் உற்ற துணையாகி நம்முடன் கைக்கோர்த்து வந்ததை நினைத்துப் பார்க்கையில் மனம் தானாகவே சிறு துள்ளலுடன் குதிக்கின்றது. இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் பொம்மை நம்முடன் கைக்கோர்த்தால் நன்றாக இருக்குமோ என்றும் கூட எண்ணத் தோன்றும். நம் வார்த்தைகளையும் மனக்குறைகளையும் வேண்டுகோள்களையும் எவ்வித மறுப்புமின்றி கால வரையறையின்றி செவிமடுப்பதுமில்லாது அதை மறுத்து எவ்வித கருத்தையும் முன்வைக்காத பொம்மையின் மௌனம் பலருக்கு விருப்பமான ஒன்று.

மனித வாழ்க்கையைப் பொம்மையைக் கொண்டு தெளிவாக காட்சிப்படுத்தியுள்ளது ஜெயகாந்தனின் ‘பொம்மை’. இக்கதை ஒரே தெருவில் இருக்கும் இரு பெண் குழந்தைகளை மையப்படுத்தி ஆனால் இரு வெவ்வேறான வாழ்க்கை சூழலை நம் முன் வைக்கின்றது. ராணி, பெயருக்கேற்ற ராணி வாழ்க்கையை குழந்தை முதலே அனுபவிக்கிறாள். இவ்வாழ்க்கை முறைக்கு எதிர்ப்பதமாய் சிவகாமியின் வாழ்க்கை. இரு குழந்தைகளும் சந்தித்து பேசிக் கொள்ளும் மழலை மொழி குழந்தை தளத்திலிருந்து விலகாமலே இருக்கின்றது. குழந்தைகளின் பேச்சில் பொம்மை குறுக்கிடுகின்றது. ராணியின் பொம்மையைப் போன்றே தனக்கும் வேண்டுமென ஆவல் கொள்கின்றது தன் வாழ்க்கையின் துயர் புரியாத சிவகாமின் குழந்தை மனம். பெற்றவளிடம் கோரிக்கையை முன்வைக்கிறாள். குழந்தையின் மனம் நோகாது பொம்மையில்லாததால் தம்பியிடம் விளையாடும்படி சொல்லும் தாயின் வார்த்தைகள் சிவகாமியின் மனதில் ஆழ பதிகின்றன. தம்பியைப் பொம்மையாக்கி ராணியைப் போன்று விளையாடுகின்றாள். ராணி பொம்மையைக் குளிப்பாட்டியது போன்றே தானும் குளிப்பாட்டி மகிழ்கின்றாள். பொம்மைக்கும் தம்பிக்கும் உள்ள வித்தியாசத்தைக்கூட அவள் அறிந்திருக்கவில்லை. தம்பி அவளுக்குப் பொம்மையாகி போகின்றான். அவளுக்குக் குதூகலமாய் இருக்கும் அத்தருணங்கள் நம் கண்களைப் பதற்றத்துடன் கலங்க வைக்கின்றன. சிவகாமி விளையாடி முடிக்கையில் தம்பியின் உயிரும் சேர்ந்தே முடிகின்றது. அதை அறியக்கூட இயலாத குழந்தையைச் சாட முடியவில்லை.

குழந்தைகளின் வாழ்க்கையை ஆழ்ந்து நோக்கினால் எதுவுமே இல்லாததைப் போன்ற மாயையை உண்டாக்கினாலும் பல ஆழ்ந்த யதார்த்தங்கள் பொதிந்து கிடக்கும் உன்னத கிடங்காகவே மெல்ல மெல்ல உணர முடியும். உயிரற்ற பொம்மை உயிரையே பறித்துச் செல்லும் பரிதாபம் நெஞ்சினுள் பாராமாய் அழுத்துகின்றது.

‘வீதியிலிருப்பதெல்லாம் வீட்டிலிருப்பதாகத்தான் கறுப்பு குழந்தைக்கு நினைப்பு. வீதியே வீடாகிவிட்டபின்.....’ என்ற வரிகள் மீண்டும் மீண்டும் சிந்தனையுள் புகுந்து கொண்டு வாழ்வின் அர்த்தங்களை உணர செய்கின்றன.

வாழ்க்கையின் ஏற்ற தாழ்வு குழந்தைகளுக்குப் புரிவதில்லை. அதனால்தான் குழந்தைகளின் வாழ்க்கைத்தளம் எப்போதும் மகிழ்ச்சியும் குதூகலமும் நிரம்பியதாக உள்ளது. பல வித உருவங்களை ஏந்தி ஏற்ற தாழ்வுகள் வாழ்க்கையில் உட்புகுந்து மகிழ்ச்சியைக் குறைப்பதில் அரிய பங்காற்றுவதை உணர சற்று சிரமாமயிருந்தாலும் மறுக்க முடியவில்லை.

குழந்தைகளின் பருவத்தைத் தாண்டி இப்பகுதியை உட்புகுத்தினால் இன்னும் பல தெளிவுகள் பிறக்கின்றன. உயிரும் உணர்வுமற்ற பொம்மை போன்ற பல விஷயங்கள் உயிரும் உணர்வுமுடைய மனித மனங்களில் ஆசையைத் தூண்டிவிட்டு விளையாடுகின்றன. அந்த ஆசையில் மூழ்கி அதனைத் துரத்திச் செல்லும் மனித மனங்கள் இழக்கும் உன்னதமான தருணங்களும் உறவுகளும் இழப்புகளுக்குப் பின்னரே அருமையை உணர செய்கின்றன. இழப்புகளே வாழ்வின் பல அர்த்தங்களைக் கற்பிக்கின்றன. இழப்புகளின் பின்னே ஆசைகளைத் திரும்பிப் பார்த்தால் காணாத புள்ளியாகி மறைந்துவிடுகின்றது. உயிரும் உணர்வுமற்ற ‘பொம்மை’ உயிருள்ள நம் உணர்வுகளை வருடி செல்கின்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>