முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 26
பிப்ரவரி 2011

  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16
மவோரி மூலம் : கெரி ஹல்ம் (நியூசிலாந்து) | தமிழில் : இளங்கோவன்
 
 
       
நேர்காணல்:

எல்லா தவறுகளையும் அனுமதிக்கும் இந்த வாழ்வில், நான் சொல்ல என்ன கருத்து இருக்கிறது?

சஞ்சய் குமார் பெருமாள்குறும்பட விமர்சனம்:

'வாழ்க்கையை உரையாடுதல்' - சஞ்சய் குமார் பெருமாளின் ஜகாட் (Jagat)
கே. பாலமுருகன்மலேசிய இந்தியர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் 'இண்டர்லோக்' (Interlok) மலாய் நாவல் சர்ச்சை குறித்தான அலசல்கள்

"பறையனாக இருப்பதில் நமக்கு என்ன பிரச்சனை?"
ம‌. ந‌வீன்

காலம் கடந்த ஞானமும் தண்டனையும்: “இண்டர்லோக் சமூகத்தின் ஆழ்மனம்”
கே. பாலமுருகன்

அடையாளமற்றவர்கள்
சு. யுவராஜன்சிறுகதை:

அமென்
கிர‌க‌ம்

விட்டாச்சு லீவு
சின்னப்பயல்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...8
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...15
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


நிலத்தினும் பெரிதே
ரவிக்குமார்

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனிகவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...16

லதாமகன்

தவ சஜிதரன்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

ரெ. பாண்டியன்

எலும்புப்பறி

எங்கே உன் எலும்புகள்?
என் எலும்புகள் கடலில் கிடக்கின்றன.

எங்கே உன் எலும்புகள்?
அவை தொலைந்துபோன நிலங்களில்
திருடப்பட்டு, உழப்பட்டு புதைக்கப்பட்டன.

எங்கே உன் எலும்புகள்?
தென்புறத் தீவுகளில்
கண்டுபிடிக்கும் காற்றினால்
அறுத்தெறியப்பட்டன.

எங்கே உன் எலும்புகள்?
மொராக்கி, புராக்கானுய், அராகுரா,
ஒக்காரிட்டோ, முரிஹிக்கு, ராக்கியூரா...
என்று முணுமுணுக்கலாம்.

எங்கே உன் எலும்புகள்?
கனமாக என் இதயத்தில் கிடக்கின்றன.

எங்கே உன் எலும்புகள்?
காலப் பிரக்ஞையற்ற மனத்தில்
ஆடல் பாடல்களாக,
பழஞ்சொற்களாக அரங்கேறுகின்றன.

எங்கே உன் எலும்புகள்?
இதோ இங்கே என் மனவுறுதியில்,
நடக்கும் கால்களில் வலிமையில்,
இறுகும் முஷ்டியில்.
ஆனால்...

எங்கே உன் எலும்புகள்?
ஆ!... என் எலும்புகள்!
ஆளவந்த அந்நியர் உண்ண
ரொட்டிக்கு மாவாக்கப்பட்டன.

 

கிரைஸ்ட் சேர்ச்சில் பிறந்த கெரி ஹல்ம், மவோரி இலக்கியத்தின் தலையாயப் படைப்பாளிகளில் ஒருவர். சமையற் பெண்ணாக, தொலைக்காட்சி நிலைய இயக்குநராக, சட்டக்கல்வி மாணவியாக, புகையிலை பொறுக்கும் கூலியாக, பஞ்சாலைத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, தென் பசிபிக்கின் சிறந்த நாவலாசிரியையாகவும் கவிஞராகவும் அறிமுகமாகியிருக்கிறார்.

இவரது படைப்புகள் தேசிய அளவிலும், உலக அரங்கிலும் கவனத்திற்குரியவையாய் உள்ளன. "எலும்பு மனிதர்கள்" என்ற மவோரி நாவலின் மூலம் ஆங்கில இலக்கிய உலகத்தைக் கலக்கிய இப்பெண்மணி மவோரி - பக்கேஹா (வெள்ளையர்) இனப்பூசல்களையும் பொருளாதாரக் கலாச்சாரச் சுரண்டல்களையும் தத்ரூபமாய் இனங்காட்டத் தவறுவதில்லை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>