வல்லினத்திற்கு படைப்புகளை அனுப்பும் எழுத்தாள நண்பர்கள், வேறு இணைய
இதழ்களிலோ அல்லது
அச்சு இதழ்களிலோ ஏற்கனவே பிரசுரமான படைப்புகளை அனுப்ப வேண்டாமென
கேட்டுக்கொள்கிறோம் - ஆசிரியர் குழுலும்பினி (www.lumpini.in) இதழில் இடம்பெற்ற வல்லினம் ஆசிரியர் ம. நவீனின் நேர்காணல்,
வல்லினம் வாசகர்களுக்காக ம. நவீன் பக்கங்களில் மறுபதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
பத்தி: மா. சண்முகசிவா : கனிவில் நனைந்த அக்கறை சு. யுவராஜன் மூன்று வாரம் கடந்திருக்கும். மழையில்லா இரவில் சண்முகசிவா அழைத்தார். எனக்கு நிலமையைப் புரிந்துக் கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. தனக்கு கதைகள் பிடித்திருப்பதாகவும், மலேசியாவில் இளையர்கள் இந்த தரத்தில் எழுதுவது அரிதென்றும், நேரில் சந்தித்தால் தொடர்ந்து கதைகளைப் பற்றி பேசலாம் என்றும் சொன்னார்.
பத்தி: பின்தொடரும் ஓவியங்கள் யோகி அவரின் ஒற்றைக்கண் ஓவியங்களை என் ஆல்பத்தில் ஆங்காங்கே பயன்படுத்திக் கொண்டேன். அவர் யார்? எப்படி இருப்பார்? என்றெல்லாம் தெரியாது. ஓவியர்களில் வயதானவர்கள்தான் அதிகம். இதில் ஏதோ ஒரு வயது போன ஓவியர் என்று மட்டும் நானே கனிந்திருந்தேன். நான் ஸ்கெட்ச் போட்டு வைத்த ஓவியராக அவர் இல்லை.
பத்தி: ஒரு மின்னஞ்சலும்... தற்கொலை செய்து கொள்ளும் தத்துவங்களும்! ம. நவீன் 'நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது நிஜம். பயப்பட வேண்டாம். இது ஜப்பானின் பிரபலமான உணவு. ஜப்பான்மருத்துவ மனையில் இறந்து போன குழந்தைகளை 10000 லிருந்து 12000 யென் வரை விலை கொடுத்து வாங்கலாம். அதிலும் வாட்டப்பட்ட சிசுக்களின் இறைச்சி மிகவும் பிரபலம். மிகவும் கவலைக்கிடமான செய்தி இது.'
பத்தி: இயற்கை (6) - காற்று எம். ரிஷான் ஷெரீப் காற்று ஒரு பரம ஏழை யாசகனைப் போல எளிமையானது. உலகையே உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தானென்ற மமதை சிறிதுமற்றது. அதனால்தான் காற்றால் எல்லா வறிய இடங்களையும் கூட எளிதில் சொந்தம் கொண்டாடிவிட முடிகிறது.
கட்டுரை: பிறந்த மண்ணின் இறந்த காலங்கள் ஏ. தேவராஜன் உலகின் எந்த மூலைக்குப் போனாலும் கிராமங்களும்
தோட்டப்புறங்களும்தான் மனிதனின் ஒட்டுமொத்த பண்பாட்டுக் கலாச்சார
பிறப்பிடங்களாகத் திகழ்கின்றன. மலேசியாவைப் பொறுத்தமட்டில்
தோட்டப்புறங்கள்தான் நமது முதல் இருப்பு என்பதைத் தலைமுறை மறந்து வருகிறது.
கட்டுரை: புனைவிலக்கியத்தில் நா. கோவிந்தசாமி... ஒரு மீள் பார்வை கமலாதேவி அரவிந்தன் நா.கோவிந்தசாமி அமரராகி, பத்தாண்டுகள் நிறைவுபெறும் இவ்வேளையில், தோழியர் புஷ்பலதா, நா.கோ பற்றி ஒரு கட்டுரை எழுதுவதன் அவசியம் பற்றி பேசியபோது கூட யோசிக்கவே இல்லை. ஆனால் எழுத பேனா பிடித்தபோதுதான், சில நிமிஷங்களுக்குத் தொடரவே முடியாமல், ஸ்தம்பித்துப்போய், தாவரமாகிப் போனேன்.
கட்டுரை: ‘கூர்’ - 2010 கனடா கலை இலக்கிய மலர் கட்டுரைகள் குறித்த கருத்துக் குறிப்பு க. நவம் மேலெழுந்தவாரியான ‘அபிப்பிராயம் கூறல்’ எல்லாம் விமர்சனங்களாக அங்கீகரிக்கப்படும் இன்றைய எமது இலக்கியச் சூழலில், கனடாவில் வெளியிடப்பட்ட ‘கூர்’ - 2010 கலை இலக்கிய மலரில் உள்ள கட்டுரைகளைப் பற்றிய ‘அபிப்பிராயங்களை மட்டும்’ சொல்லிப் போக முற்படுதலும் ஒருவகையில் ஒரு தற்பாதுகாப்பு முயற்சிதான்!
புத்தகப்பார்வை: எம். ரிஷான் ஷெரீஃபின் 'வீழ்தலின் நிழல்' - எனது பார்வையில்! தேனம்மை லக்ஷ்மணன் வாழ்வதன் ஆவலையும் கவலையையும் குறித்துப் பேசும் இதில் இளவயதின் காதல் ஏக்கங்களும், வாழ்வியல் துயரங்களும், புலம்பெயர் நிலையும், எதையும் சீர் செய்யவியலா கையறு நிலையும், தணிக்கவியலா தனிமையும், நட்புகான தேடலும் பொங்கிக் கிடக்கிறது.
பதிவு: நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி - விமர்சனக் கூட்டம் வாணி பாலசுந்தரம் கடந்த ஆனி மாதம் ஈஸ்ற் யோர்க் நகர மண்டபத்தில் ஆசிரியர் ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா அவர்களின் 'நான் நிழலானால் சிறுகதைத் தொகுதி' விமர்சனக் கூட்டம் மிசவும் சிறப்பான முறையில் நடந்தேறியது.
எதிர்வினை: இலக்கியக் குற்றவாளியின் வாக்குமூலம் பா. அ. சிவம் ஒரு நேர்காணலில், ம.நவீன் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ள இரு கூற்றுகளுக்கு விளக்கம் தர நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக இக்கட்டுரையை எழுதுகிறேன்.
எதிர்வினை: பா. அ. சிவத்தின் எதிர்வினைக்கான பதில் ம. நவீன் லும்பினி.கோம் எனும் இணையத் தளத்தில் பிரசுரமாகிய எனது நேர்காணலுக்கு சிவம் தனது எதிர்வினையை வல்லினம் அகப்பக்கத்திற்கு எழுதியிருந்தார். நியாயப்படி அது லும்பினிக்கு அனுப்பப் பட்டிருக்க வேண்டும்.
சிறுகதை:
மார்க் தரும் நற்செய்தி
நாகரத்தினம் கிருஷ்ணா பண்ணை வீடு மிகப் பெரியது, கொஞ்சம், கவனிப்பாரற்றுமிருந்தது. பண்ணையாள் குடியிருப்பான கூத்ரே (gutre) கூப்பிடு தூரத்திலிருந்தது. கூத்ரே வாசிகளென்று மொத்தம் மூன்றுபேர்: தந்தை, மகன் (சரியான கல்லுளிமங்கன்) அடுத்து ஒர் இளம்பெண்.
சிறுகதை:
தும்பிகள்
ஆர். அபிலாஷ் வாழ்வின் இறுதி நாட்களை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்த கபாலீஸ்வரன் தன் கல்லூரி நாட்களை ஒரு முறை விரல் விடாமல் எண்ணிப் பார்த்தான். எரிச்சலோடு சிகரெட் புகையை இழுத்து விட்டுக் கொண்டான். சிகரெட் நுனி கனன்று தகித்தது.
சிறுகதை:
பயணம்
சின்னப்பயல் இழைக் கண்ணாடிப் பாதுகாப்புச் சன்னலூடே பார்வையைச் செலுத்தினேன். கும்மிருட்டு, நட்சத்திரங்கள் அனைத்தும் என்னோடு விரைவாக நகர்ந்து வந்தன. நிலவைத் தேடினேன் காணவில்லை, சிரித்துக் கொண்டேன்.
சிறுகதை:
காசியும் கருப்பு நாயும்
ம. நவீன் காசி மெல்ல நாயை விரட்ட முயன்றார். அதன் மேல் தட்டி விரட்ட முதலில் எண்ணியவர் பிரமாண்டமான அதன் உடலைப் பார்த்து ஒருதரம் தயங்கினார். பின்னர் தன் தொடையையே வேகமாக இருமுறை தட்டினார்.
சிறுகதை:
மௌனத்தின் உள்ளிருக்கும் மௌனங்கள்
க. ராஜம்ரஞ்சனி அவர் என்ன சொல்வார் என என் கண்கள், செவிகள் அனைத்தும் அவரை மட்டுமே உற்று நோக்கின. அவர் ஏதும் உணராதவராய் சிறு மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்து விட்டு நடந்தார். நான் மட்டும் அவர் செல்லும் திசையை நோக்கித் திரும்பி நின்றேன். என் வணங்கிய கரங்கள் அப்படியே இருந்தன.
தொடர்: அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...3 எம். ஜி. சுரேஷ் உண்மை, யதார்த்தம் போன்ற விஷயங்கள் பொதுவானவை அல்ல. ஒவ்வொருவரின் பார்வைக்கும் ஒவ்வொரு விதமான தோற்றத்தைக் கொண்டவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
தொடர்: நடந்து வந்த பாதையில் ...9 கமலாதேவி அரவிந்தன் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்த இலக்கியவாதிகள் பேச்சு.... ஹூம்... அப்படி ஒரு ஏமாற்றத்தை இவள் எதிர்பார்க்கவேயில்லை. தமிழிலக்கியத்தின் சமகால இலக்கியம் பேசவில்லை.