முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

தமிழக மீனவர்கள் இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டு அந்த நாட்டுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள செய்தி தமிழ்நாட்டில் கடுமையான கோபத்தைத் தூண்டியிருக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததுமட்டுமின்றி தமது இழுவைப் படகுகளால் ஈழ மீனவர்களின் வலைகளை சேதப்படுத்திவிட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதில் உண்மை இருக்கலாம் அல்லது வீண்பழியாகவும் இருக்கலாம். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என இந்திய வெளி உறவு அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்தப் பிரச்சனை தொடர்பாக சிலவற்றை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது:

1. கடந்த 1983 முதல் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். அதை ஈழத் தமிழ் இயக்கங்களோ தலைவர்களோ கண்டித்து ஏதாவது செய்ததுண்டா? அங்கிருந்து ஜனநாயகக் குரல் எதுவும் எழுந்ததுண்டா?

2. கடற்கரைப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்து சிங்களமயப் படுத்திட இலங்கை அரசு முயன்றுவருகிறது என சொல்லப்படுகிறது. அப்படியானால் தற்போது மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அந்த சதித் திட்டத்தின் ஒரு அங்கமா ?

3. இலங்கை அரசு ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தி அதை ஈழம் மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கிடையேயான மோதலாக மாற்றுவதற்கு திட்டமிடுகிறதா? அதற்கு இந்திய அரசும் துணைபோகிறதா?

4. ஈழத்தமிழ் மீனவர்களுக்கும் தமிழக மீனவர்களுக்கும் இடையே நட்புறவை வளர்ப்பது குறித்து தமிழ்நாட்டில் இருக்கும் தமிழ்த் தேசிய கட்சிகள் அக்கறையின்றி இருப்பது ஏன்? அவர்கள் இலங்கை அரசை மட்டுமே குறைகூறும்போது தமிழ் இயக்கங்களின் கடமைகளை சுட்டிக்காட்டத் தவறுகிறார்கள் இல்லையா? இது தொடர்பில் தமிழ்நெட் இணைய தளத்தில் வெளியாகியிருக்கும் செய்திகளும்கூட தமிழக மீனவர்களைக் குறை சொல்வதாகவே அமைந்துள்ளன. அவர்களைத் தடுக்க இலங்கைக் கடற்படை சரிவர செயல்படவில்லை என்பதாகவே அந்தச் செய்திகள் இருக்கின்றன. இழுவைப் படகுகளைக்கொண்டு மீன் பிடிப்பதால் மீன்வளம் பாதிக்கப்படும் என்பது சரி. அதற்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதும் சரி. ஆனால் அதற்காக தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவது சரியா ?

5. தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக அங்கிருந்து ஜனநாயகக் குரல் எதுவும் எழ முடியாது என்பது உண்மைதான். ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இதுகுறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாமல் இருப்பது ஏன்? அவர்கள் இந்தப் பிரச்சனை குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு என்ன தடை?

6. ஈழத்தில் போராளிக் குழுக்களை இந்திய அரசு உருவாக்கியபோது அவர்களுக்குப் பயிற்சியளிப்பது, தளவாடங்களை அனுப்புவது ஆகியவற்றுக்கான ‘பின் தளமாக’ தமிழ்நாடு பயன்படுத்தப்பட்டது. அந்தப் ‘பின் தளம்’ என்ற மனோபாவத்திலிருந்து இன்னும் ஈழத் தமிழர்கள் விடுபட்டதுபோலத் தெரியவில்லை. தமிழ்நாடு என்பது தமக்கான ஆதரவைப் பெறுவதற்கான நிலப்பகுதி என்று மட்டுமே கருதும் இந்த மனோபாவம் சரியானதுதானா? தமிழ்நாட்டுத் தமிழர்கள் இலங்கை அரசால் பாதிப்புக்கு ஆளாகும்போது மௌனம் காப்பது சரிதானா?

7. தமிழக மீனவர்கள் ஈழத் தமிழ் மீனவர்களுக்கு எந்தவொரு நட்டத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடாது. அதை தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்கள் வலியுறுத்தவேண்டும். அதுபோலவே ஈழத் தமிழ் மீனவர்களும் தமிழக மீனவர்களைச் சகோதரர்களாகக் கருதவேண்டும். அவர்கள் இலங்கை அரசோடு கூட்டு சேர்ந்துகொண்டு செயல்படக் கூடாது . அங்கிருக்கும் ஒட்டுக் குழுக்கள்தான் அப்படி நடந்துகொள்கின்றன என்றால் மற்ற ஜனநாயக சக்திகள் அதைக் கண்டிக்க வேண்டாமா? அவர்கள் இலங்கை அரசைப் போல நடந்துகொள்ளக் கூடாது இல்லையா?

8. இந்தியப் படைகள் இலங்கைக்குள் வந்து நிலைகொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டபோது அவர்களை வெளியேற்ற தமிழ்ப் போராளிகள் இலங்கை ராணுவத்தோடு சேர்ந்து செயல்பட்டது வரலாறு. ஆனால் தமிழக மீனவர்கள் இந்திய அமைதிப் படையின் ஜவான்கள் அல்ல. அவர்களை எதிர்க்க ஈழத் தமிழ் மீனவர்கள் இலங்கை காவல் துறையோடும் ராணுவத்தோடும் கூட்டு சேர்வது எவ்விதத்திலும் சரியல்ல.

ஈழத் தமிழர்கள்மீதும், தமிழக மீனவர்கள் மீதும் அக்கறை உள்ளவர்கள் இதை விவாதிக்க முன்வரவேண்டும். பரஸ்பரம் ஆதரவுக் குரல்கள் எழுந்தால்தான் நட்புறவு நிலைத்திருக்கும். இவ்வளவுகாலம் இதில் பிழை விட்டிருந்தாலும் இப்போதாவது விழிப்புணர்வு வரட்டும். ஈழத்தில் மாவீரர்கள் ஆனவர்களோடு இந்தியக் கடல் பரப்பில் இலங்கைக் கடற் படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களையும் மாவீரர்கள் என்றே கருதவேண்டும். அவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணம் சிங்கள வெறியர்களின் இன வெறியே ஆகும். இதைச் சரியாகப் புரிந்துகொண்டு ஈழத் தமிழர்களிடையே உள்ள ஜனநாயக சக்திகள் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் சரியான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். இது காலத்தின் தேவை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>