முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

இம்மானுவேல் காண்டுக்கும், பிரெடரிக் நீட்ஷேவுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு முக்கியமான சிந்தனையாளர் தோன்றி இருந்தார். அவர் பெயர் ஹெகல். ஐரோப்பியத் தத்துவ இயலில் மிக முக்கியமான ஆளுமையான ஹெகல், காண்டின் கோட்பாடான ‘பொருள் சாரம்’ என்பதையும், ‘பரமதத்துவ’த்தையும் நிராகரித்தார். காண்ட் ஒரு பொருளை, அதுவாக இருப்பது (thing in itself) என்றும் நமக்காக இருப்பது (thing for me) என்றும் இருவிதமாகப் பிரித்தார். நாம் பொருட்களை அது நமக்காக இருப்பது பற்றி மட்டும்தான் பேசுகிறோம். அது இயல்பில் அதுவாக இருப்பது பற்றி யோசிப்பது இல்லை. பொருள் அதுவாக இயல்பிலேயே இருப்பதுதான் பொருளின் சாரம் (essence). பரமதத்துவம் என்பது கடவுளைக் குறிக்கும்.

காண்டின் கோட்பாட்டுக்கு பதிலாக, ’மனமும், உலகியல் சக்திகளும் வேறு வேறு இல்லை; இரண்டுமே ஒன்றோடொன்று இணைந்திருப்பவையே’ என்றார் ஹெகல்.மனதுக்குத் தன் முத்திரையைப் பதிக்க ஒரு பௌதீக உலகம் தேவை. முத்திரையைப் பதிக்கத் துடிக்கும் மனமும், பதிக்கப்படும் உலகமும் மனம் சார்ந்ததே. இவையே பரமதத்துவத்தின் பிரிக்க முடியாத பகுதிகள். இந்த பரமதத்துவம் காண்டின் பரமதத்துவத்திலிருந்து வேறு பட்டது. காண்டின் பரமதத்துவம் நிலையானது. மாறாதது. ஹெகலின் பரமதத்துவமோ மாறுவது. அது சதா இயங்கிக் கொண்டே இருப்பது. உலகம் வினாடிக்கு வினாடி மாறிக் கொண்டே இருக்கிறது. கருத்து, பகுத்தறிவு, உண்மை, ஞானம் ஆகியவை வளர்ச்சியின் வரிசையாகும். வளர்ச்சி என்பது கீழிலிருந்து மேல் நோக்கிப் போவது. ஒரு பொருள் வளர்ச்சி அடையும் போது அது பல்வேறு உருவங்களை எடுக்கிறது. அந்த உருவங்கள் தங்களுக்குள்ளேயே முரண்படுகின்றன என்பது முக்கியமானது. ஒரே பொருளின் கூறுகள் வளர்ச்சியின் போது தங்களையே எதிர்த்துக் கொள்கின்றன. ஒரே உருவத்தின் பகுதிகளான அவை தங்களுக்குள் முரண்பாடுகளையும், எதிர்ப்புச் சக்திகளையும் உருவாக்கிக் கொள்கின்றன. முரண்பாடும் எதிர்ப்புத் தன்மையும் எல்லாவிதமான வாழ்க்கைக்கும் மூலாதாரம் ஆகும். முரண்பாடு இல்லாவிட்டால் உலகில் உயிர் இருந்திருக்காது; வாழ்வு இருந்திருக்காது. ஒரு செடி முளைக்கிறது; வளர்கிறது; பூக்கிறது; காய்க்கிறது; பட்டுப்போகிறது. இந்த வளர்ச்சிப் போக்கு முரண்பாடுகளின் மூலமே சாத்தியப்படுகிறது.

ஒரு பொருள் வருகிறது. அதன் பின் வேறு ஒரு பொருள் வருகிறது. அவை இரண்டுக்கும் இடையே முரண்பாடு வருகிறது. அவ்விரு பொருள்களின் இரு கூறுகளும் ஒன்றிணைந்து மூன்றாவதாக வேறு ஒரு பொருள் புதிதாக உருவாகிறது. இதை இயக்கவியல் என்கிறார் ஹெகல். இதற்கு எடுத்துக் காட்டாக நாம் தமிழ் நாட்டில் தோன்றிய திராவிடக் கட்சிகளின் வரலாற்றைப் பார்க்கலாம். முதலில் திராவிடர் கழகம் தோன்றியது. அது வளர்ச்சி அடைந்தது. வளரும் போதே அண்ணா போன்றவர்களால் உள் முரண், எதிர்ப்புகளால் பாதிக்கப்பட்டு இன்னொரு பொருள் உருவாகக் காரணமாக இருந்தது. அந்த இன்னொரு பொருள் திராவிட முன்னேற்றக் கழகம். இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்தது. அதன் வளர்ச்சிப் போக்கில் உள் முரண், எதிர்ப்புகளை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். பின்பு இன்னொரு பொருளை உருவாக்கினார். அதன் பெயர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம். இதுதான் இயக்கவியல். இது ஹெகலின் உலகப் புகழ் பெற்ற கோட்பாடாகும்.

உலகம் என்பது எப்போதும் படைப்பு உருவாக்கத்தில் இருக்கிறது. வளர்ச்சி என்பது தற்காலிகமானது அல்ல. அது நிரந்தரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வாகும். வளர்ச்சி என்பது சூன்யத்திலிருந்து வரவில்லை. இருக்கும் பொருட்களின் இடையறாத மாற்றமாக அது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆக, வளர்ச்சி என்பது மாறுதலே.

ஹெகலின் இன்னொரு புகழ்பெற்ற கோட்பாடு ‘நிலை மறுப்பின் நிலை மறுப்பு’ (Negation of the negation) என்பதாகும். இதில் அறிவின் மூன்று நிலைகளை ஹெகல், கோட்பாடு (thesis) > எதிர் கோட்பாடு (anti-thesis) > இணைந்த கோட்பாடு (synthesis) என்று வரையறுக்கிறார். இந்தக் கோட்பாடு கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அறிவியல் போன்ற எல்லாத்துறைகளுக்கும் பொருந்தும். எல்லா விஷயங்களுமே கோட்பாடாக உருவாகி, எதிர்-கோட்பாடுகளால் முரண்படுத்தப்பட்டு, இணைந்த கோட்பாடுகளாக உருப்பெறுகின்றன. மீண்டும் அந்த இணைந்த கோட்பாடு ஒரு புதிய கோட்பாடாக நிலை பெற்று அதனுள் மீண்டும் எதிர்-கோட்பாடு தோன்றி அது முரண்பட்டு....இப்படியே இது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது பரிணாம வளர்ச்சி எனப்படும்.

உண்மையைப் பற்றிப் பேசும் போது ஹெகல், உண்மை என்பது அகம் சார்ந்தது என்கிறார். மனிதனின் அக உணர்வை மீறிய உண்மை என்று எதுவும் இல்லை. அறிவு என்பதே மனித அறிவைக் குறிக்கும். அப்படி இருக்க மனித அறிவை மீறிய ஒரு உண்மை எவ்விதம் சாத்தியம்? என்பது அவர் கோட்பாடு. ஹெகலுக்கு முந்தைய தத்துவவாதிகளான தெக்கார்த், ஸ்பைனோசா, ஹ்யூம், காண்ட் போன்ற அனைவரும் காலவரையற்ற ஓர் உண்மை பற்றிப் பேசினார்கள்.ஹெகலோ அந்தக் கோட்பாட்டை மறுத்தார். மனித அறிவு என்பது அனுபவத்தின் மூலம் பெறப்படுவது. அது மாறிக்கொண்டே இருக்கும். மாறிக் கொண்டே இருக்கும் ஓர் உலகில் அறிவு மட்டும் எப்படி மாறாமல் இருக்க முடியும் எனும் கேள்வியை ஹெகல் எழுப்பினார். எனவே, காலத்தை மீறிய ஓர் உண்மையோ அல்லது அறிவோ இல்லை என்பது அவரது வாதம். உண்மையைப் பற்றிய தனது கொள்கையை புற உண்மை(objective truth) என்றும் ஹெகல் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, ஓர் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆற்றின் எந்தப் பகுதியை ‘உண்மை’யான பகுதி என்று நாம் சொல்ல முடியும்? ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றின் ஒவ்வொரு அசைவையும், அதன் ஒடும் வழியில் எதிர்ப்படும் மேடு பள்ளங்கள், வளைவுப்பாதைகள், நீர் வீழ்ச்சி போன்றவை தீர்மானிக்கின்றன. அதைப் போலவே, வரலாறு என்ற ஆற்றின் கரையில் நின்று நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் நின்று கொண்டிருக்கும் இடத்தை வைத்து இதுதான் ‘ஆற்றைப் பற்றிய உண்மையான அறிவு’ என்று நாம் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் அது உண்மை அறிவைக் குறுக்கிப் பார்ப்பது அல்லவா? எனவே, உண்மையை வரையறுப்பதில் சிக்கல்கள் உள்ளன என்கிறார் ஹெகல்.

ஹெகல் கூறும் விஷயங்களிலும், சில சிக்கல்கள் இருக்கின்றன. உலகில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஹெகல், எதிர்காலத்தில் வரப்போவது இப்போதே இருக்கிறது என்கிறார். இது மாற்றமின்மையை வலியுறுத்துகிறது. காண்டின் பரமதத்துவத்தை மறுக்கும் இவர் அதற்குப் பதிலாகத் தான் முன் வைக்கும் பரமதத்துவத்தில் எல்லாவற்றையும் போட்டு அடைக்கிறார். அதே போல் அவரது இயக்கவியல் சிந்தனையிலும் ஒரு ஆபத்து இருக்கிறது. முரண்பாடாக இருக்கும் இரண்டு விஷயங்கள் ஒன்றிணைந்து மூன்றாவதாக ஒரு புது விஷயம் உருவாகும் என்கிறார் அல்லவா? அதன்படி பார்க்கும் போது நன்மை என்பதற்குத் தீமை முரணான பொருளாக இருக்கிறது. இப்போது நன்மையைத் தீமை எதிர்த்து முரண்படும் போது நன்மையும் தீமையும் ஒன்றிணைந்து மூன்றாவதாக ஒரு புதிய பொருள் உருவாகும் என்று கொள்ளலாம். அப்படிக் கொள்ளும் போது தீமையும் நல்ல விஷயமே என்று அங்கீகரிப்பது போல் இருக்கிறது. இதை ஆதரிப்பதாக இருந்தால் சமூகக்கொடுமைகளை நல்லதே என்று ஆதரிக்க வேண்டிய அவல நிலை நேரும்.

எது எப்படியோ, ஹெகல் உயிருடன் இருந்த வரை அவரது கோட்பாடுகள் அசைக்க முடியாதபடி உறுதியாக இருந்தன. மார்க்ஸீயமே ஹெகலியத்தினால் கட்டமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெகல் இறந்த பத்தாண்டுகள் கழித்து ஐரோப்பாவில் ஒரு புதிய சிந்தனையாளர் தோன்றினார். அவர் ஹெகலின் கோட்பாடுகளின் மீது போர் தொடுத்தார். ஹெகலின் உண்மை பற்றிய கோட்பாட்டை நிராகரித்தார். உண்மை என்று தனியான பொருள் ஏதுமில்லை. உண்மை என்பது ஒற்றையான பொருள் அல்ல என்றார் அவர். உண்மை ஒன்று அல்ல; பல. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த உண்மை என்று உண்டு என்று அறிவித்து அனைவரையும் திடுக்கிட வைத்தார். அவர் பெயர் சோரன் கீர்க்கேகார்ட்.

(தொடரும்)

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>