முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

”நலமாக போய் வாருங்கள் அம்மா!” என்று இசை ஆசிரியரும், களறி ஆசிரியரும் விடைபெற்றுச்செல்ல, மாணவர்கள் அத்தனைப்பேரும் வட்டமாக இவளைச்சுற்றி அமர்ந்து கொண்டு பேசினார்கள்... பேசினார்கள்... அப்படிப் பேசினார்கள்.

இவள் சேச்சியாய் லட்ஷணமாக, அவர்களை உபதேசித்தாள். "விநாயகத்தை திட்டக்கூடாது! முருகனும் அப்புக்குட்டனும் [பழனியும்] சண்டை போடக்கூடாது. சந்திராவின் மகன் வளர்ந்து பெரியவானாகும் வரைதான், பிறகு சந்திரா உச்சாணிக்கொம்பில் வாழலாம், இல்லையா? பசுபதி! கூத்துப்பட்டறையின் சட்டாம்பிள்ளைதான், ஆசிரியருக்கு அடுத்த ஸ்தானமே பசுபதிக்குத்தான்! யாரில்லையென்றார்கள்! அதற்காக என்ன செய்ய வேண்டும்? விநாயகத்தின் பரீட்ஷை [பி.ஏ] சமயத்தில் அவனுக்கு படிக்க நிரம்ப நேரம் கொடுக்க வேண்டும். பசுபதி! சும்மா சும்மா பிள்ளைகளைத் திட்டக்கூடாது. யாருமே யாரையுமே திட்டக்கூடாது. புரிந்ததா பசுபதி?" சொல்லும்போதே வருத்தம் மண்டிக்கொண்டு வந்தது.

"இல்லையே சேச்சி! ஞான் யாரையுமே தேவையில்லாமல் திட்டுவதில்லையே... இவர்கள்தான்... ஆனால் நிங்ஙள் நம்பமாட்டென்கிறீர்களே"

"நம்புகிறேன். பசுபதி, ஆனால் நீ மட்டும் யாரையும் திட்டக்கூடாது. சரியா? சொல்லும்போதே அழுகை வந்தது. அதற்குள் ரவிவர்மா அருகே வர, "ரவி!" என்று கைகளைப்பற்றிக் கொண்டபோது கண்ணீர் உருண்டு வழிந்தது.

"ரவி, நின்டெ பி.எச்.டி. பேப்பர் முடிந்ததும் எனக்கு எழுத வேண்டும்! என்ன?"

முருகன், முருகனுக்கு ஆங்கிலம் பேச 'crash course'ஐ கற்பிப்பதாக இவள் ஏற்றிருந்தாள், ஆனால் நேரமின்மையால் முடியவே இல்லை.

அந்தக்குற்ற உணர்வில், முருகனுக்குப் பயிற்றுவிக்க வேண்டியது நிண்டெ கடமை என்று பசுபதியிடம் வேண்டுகோள் விடுத்தாள்.

சரி சேச்சி, சரி சேச்சி! என்று மட்டுமே பசுபதி தலை ஆட்டினான்.

திடீரென்று வினாயகம் கேட்டான், ‘சேச்சி, இனி இங்கே வரவே மாட்டீர்களா?

உடனே இவள் பேச்சை மாற்றினாள். ”நிங்ஙளில் யாராவது பாடுங்களேன்..."

அப்புக்குட்டன் [புரிசை கண்ணப்பதம்பிரானின் பேரன்], 2 வரி பாடினான்... முருகன் உற்சாகமாக பாட, விநாயகமும் ஏதோ பாட, யாருமே சூழ்நிலையை ரசிக்கவில்லை. எப்படிப் பேச்சை தொடர என்றும் தெரியவில்லை. இவள் எழுந்தாள். நாளை பிரயாணம் இல்லையா?

எல்லோருமே போய்விட்டார்கள். சந்திரா மட்டும் இவளோடு தங்கிவிட்டாள். சந்திரா, சமையல் அம்மா, இவள் மட்டுமே கூத்துப்பட்டறையில்.

ஏனோ சந்திரா நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தாள். அந்தப்பெண்ணின் வாழ்க்கை சரிதம், மகனின் எதிர்கால எல்லாம் பேசினாள். கண் மயங்கியது எப்பொழுது என்றே தெரியவில்லை. 'டாண்' என்று மணியடித்தாற்போல் பழக்க தோஷத்தில் கண்விழித்தபோது சமையல் அம்மா எழுந்து விட்டார். குளித்து பூஜை முடித்து வெளியே வந்தபோது சந்திராவும் எழுந்து விட்டாள். "சாயா வேண்டுமா?" என்று சமையல் அம்மா கேட்க, இப்போது வேண்டாம் என்றிட்டு, விளக்கைப்போட்டு, சந்திராவையும் கூட்டி, அந்த 3 மாடியையும் சுற்றி வந்தாள். கொட்டிவாக்கத்தில் சுற்றிலும் பச்சைப்பசேலென்று செடி கொடிகளும், கொப்பும் கிளையுமாக உயரமான விருட்ஷங்களுமாய் கூத்துப்பட்டறை சூழலே என்ன அழகு?

இரண்டு மாடியும் இட்டாலியன் மார்பிள் பதித்து ஒவ்வொரு அறையும் தான் என்ன விசாலம்! இசைப்பயிற்சிக்கு ஒர் அறை, உடல் பயிற்சி, களரி பயிற்சி, யோகா, தியானம், நாடக வகுப்புக்கள், சுவரொட்டிகள் தயாரிப்பு என எல்லாமே மூன்றாம் மாடியில். கீழே அலுவலக அறை கூட முற்றிலும் வேறுமாதிரியான பாணியில். இசைக்கருவிகள் அறை உட்பட என என்னமாய் தேர்வு செய்திருக்கிறார் முத்துசாமி சார் இந்த இடத்தை! இவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, பொழுது பள பள வென்று விடிந்துவிட்டது. வானம் உல்லாசமாய் விரிந்திருந்தது. எல்லோருமே வந்துவிட்டார்கள்.

இவள் ஒரு சபதம் எடுத்துக்கொண்டாள். எக்காரணத்தை முன்னிட்டும் இங்கிருந்து போகும்போது அழக்கூடாது. யார் அழுதாலும் இவள் அழக்கூடாது.

அழுதால் யாராவது மதிப்பார்களா? அதுவும் இவள் யார்? சாஹித்யக்காரியல்லவா? ஒரு சாஹித்யக்காரி போய் அழலாமா? சீச்சீ?

அழுவது முட்டாள்களின் பலவீனமல்லவா? அதுவும் முத்துசாமிசாரின் முன்னால் அழலாமா? பிறகு இவள் கெளரவம் என்னாவது?

ஜம்மென்று புறப்படவேண்டாமா? yes! ஜம்மென்றே ரெடியானாள். படு படு ஜம்மென்றே நடமாடினாள்.

முத்துசாமி சார் வந்தார். “எல்லாம் கவனமாக எடுத்து வைத்தாயிற்றா?" என்று கேட்க, பசுபதிதான் பதில் சொன்னான். புறப்படும் நேரம் வந்தது. சரவணனின் காரும் வந்தது. பதறியவாறே மாணவர்கள் எல்லோருமே அருகே வர, இவள் ஆசிரியரை நமஸ்கரித்தாள். "கமலாதேவி! எப்பொழுதும் பயிற்சியில் இருங்கள். அமானுஷ்யம் என்று எதையோ நினைத்து மிகவும் பயப்படுகிறீர்கள். ஒரு படைப்பாளி இப்படி பயப்படக்கூடாது. அமானுஷ்யம் என்று ஒன்றில்லை. அது வெறும் ப்ரம்மையே. தைரியமாக இருங்கள். இங்குப் படித்த களறி, யோகா, தியானம், எல்லாம் எப்போதுமே தொடரவேண்டும்... என்ன?"

“சரி சார்!” என்றபோது இவள் குரல் இவளுக்கே கேட்கவில்லை.

”சேச்சி", பசுபதி அருகே வந்தான். ”சேச்சி, நிங்ஙள் மீண்டும் இங்கே வரவேண்டும்! அவசியம் வரவேண்டும். இங்கேயிருந்து போனாலும் எங்களையெல்லாம் மறந்து விடாதீர்கள் சேச்சி,” என்ற போது, அருகே நின்ற சந்திரா அழுதாள். எல்லோரின் கண்களுமே நனைய, கண்ணைக்கொட்டி கொட்டி, கண்ணீரை அடக்கிக்கொண்டு இவள், முருகன், வினாயகம், ஜோர்ஜ், என ஒவ்வொருவராய் பார்த்து, பார்த்து விடைபெற முயன்ற வினாடியில் அதற்குமேலும் தாங்கமாட்டாமல் சிதறிப்போனாள். வெட்கம் மறந்து, சூழல் மறந்து, சேயைப்பிரியும் தாயாய் தேம்பிதேம்பி அழ, ஆசிரியர் அருகே வந்தார்.

"கமலாதேவி அழாதீர்கள்! நீங்கள் வராவிட்டாலும் நாங்கள் சிங்கப்பூருக்கு வருவோம், பின் என்ன? அழாமல் போய் வாருங்கள்! கூத்துப்பட்டறையின் ஒவ்வொரு நிலையிலும் நிங்ஙள் இருப்பீர்கள். மாணவர்கள் ஒருபோதும் உங்களை மறக்கமாட்டார்கள். அழக்கூடாது, முதலில் கண்ணீரைத் துடையுங்கள்” முத்துசாமி சாரின் குரலின் கம்பீரம் எங்கே? ஆசிரியரின் குரலும் கம்மியிருந்தது. கண்ணீரைத் துடைக்க முடியவில்லை.

இந்தப்பிள்ளைகள் அனைவருமே என்டெ குழந்தைகள். விநாயகம் மட்டும்தான் அம்மா என்று அழைப்பான். மற்றவர்களுக்கெல்லாம் இவள் சேச்சிதான். ஆனால் மனசார இந்தப்பிள்ளைகளை, தாய்மையுணர்வோடு மட்டுமே உணர முடிகிறது. அதனாலேயே இந்த sensitive fool, emotional fool, நெஞ்சைப்பிழியும் துக்கத்தோடேயேதான் கரைந்து நின்றாள். "சேச்சி" என்றவாறே உதடு கோண, வாய் கோண பசுபதி விம்மி அழ, கரைந்து கரைந்து அழுதவாறே "போய் வருகிறேன் சார்,” என்ற பிறகு மீண்டும் அவர்களைத் திரும்பிப் பார்க்கும் துணிபு வரவில்லை.

சரவணனின் காரிலேறியதோ, விமான நிலையம் சென்றடைந்ததோ எதுவுமே விவரிக்கும் மனநிலை இல்லை. சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்து இத்தனை ஆண்டுகட்குப்பிறகும் "சேச்சி!" என்ற அவர்கள் பாச விளியை மறக்கவே முடியவில்லை. முத்துசாமி சார் கூறியதுபோலவே, தேசியக்கலைகள் மன்ற இளங்கோவனின் முயற்சியில், சிங்கப்பூர் கலாச்சார அமைப்பின் அழைப்பின் பேரில் தனது கூத்துப்பட்டறை மாணவர்கள், Dr. ரவீந்திரன் சார், [டெல்லி] காசித்தம்பிரான் என ஒரு குழுவையே அழைத்துக்கொண்டு சிங்கையில் வந்து வெற்றிகரமாக, நிகழ்ச்சி நடத்திச்சென்றனர்.

கூத்துப்பட்டறை மாணவர்கள் பலரும் இன்று சினிமாவில் ஜொலிக்கிறார்கள். ஜோர்ஜ், சந்திரா, குமார் எனப்பலரையும் தங்கர்பச்சானின் சினிமாவில் காண்கிறேன். ப்ரவீன் மணிரத்தினம் சினிமாவில், குமரவேல் பிச்சைக்காரனாய் 'அபியும் நானும்' சினிமாவில் மெயின் ரோலில் நடிக்கிறான். கலை ராணியும் சினிமாவில் காலூன்றி விட்டாள். பசுபதி இன்று சினிமாவில் முத்திரை பதித்த நடிகன். விருமாண்டியில் கொத்தாலந்தேவராக, கமலஹாஸனோடு, வசந்த பாலனின் இயக்கத்தில் “வெயில்” படத்தில், குசேலனில் ரஜினிகாந்தின் நண்பனாக, சேரனின் சினிமாவில் கண் தெரியாத அந்தகனாய் எனப்பல புகழ் பெற்ற படங்களில் பெயர் பெற்ற நடிகனாகி விட்டான். இவர்களை எல்லாம் சினிமாவில் பார்க்கும்போது முத்துசாமி சாரின் உழைப்பு வீண் போகவில்லை என்றே தெரிகிறது.

கடந்த மாதம் எனது 'நுவல்' நூல் சென்னையில் வெளியீடு கண்டபோது, ஆசிரியர் முத்துசாமிதான் முதல் நூலை வெளியீடு செய்தார். மதிப்பிற்குரிய என்டெ மற்றொரு ஆசிரியர், பேராசிரியர் ராமானுஜம் சார், தஞ்சாவூரிலிருந்து வந்து சிறப்பித்தார். "கமலம் என்டெ மகள்,” என அன்போடு ராமானுஜம் சார் என்னை பலரிடமும் அறிமுகப்படுத்தியபோது, கண்ணீர் மல்க மெய்ம்மறந்து நின்றேன். என்டெ இலக்கிய வாழ்வில் எனக்குக் கிட்டிய மிகப்பெரும் சான்றோர்கள் முத்துசாமி சாரும், ராமானுஜம் சாரும் என்பதை எல்லா பேட்டிகளிலுமே ஞான் பெருமிதத்தோடு கூறியுள்ளேன்.

இன்று ஞான் மேடை நாடகத்துறை, மேடை டைரக்‌ஷன், என எல்லாவற்றையும் முற்றாக விட்டு விலகி 10 வருடகளுக்கு மேலாகி விட்டது. ஆனால் வானொலிக்கு நாடகங்கள் எழுதுவதை ஞான் நிறுத்தவில்லை... இன்றும் நாடக வகுப்புகள், நாடக script writing, நாடக ஆய்வுக்கூறுகள் என நாடக இலக்கியம் கற்பிக்கிறேன். தருணங்கள் இப்படி மட்டுமே என்னை ஆட்கொள்கின்றன. ஆனால் முத்துசாமிசார், ராமானுஜம் சார், Dr. ரவீந்திரன் சார் போன்றோரிடம் பெற்ற பயிற்சியில், ஞான் எழுதி இயக்கிய நாடகம், என்டெ இலக்கிய வாழ்வில் முத்திரை பதித்த நாடகம். சிங்கை மலையாள இலக்கியத்தில் பெயர் பெற்ற நாடகம் என்பதை எப்படி மறக்க முடியும்? எப்படி மறுக்கமுடியும்? என்னைக் கூத்துப்பட்டறையில் பயிலுமாறு அறிவுரை கூறி அனுப்பிய என்டெ முதல் ஆசான், அமரர் கோவிந்தசாமியை நன்றியோடு இங்கு நினைவு கூர்கிறேன். மலையாள இலக்கியம் போதாது. தமிழிலும் கமலாதேவியின் எழுத்துக்கள் வேண்டும் என்று என்னைக்கொண்டாடி கொண்டாடி ஊக்குவித்த, எழுத வைத்த, பத்திரிகை ஆசிரியர்கள், நேசன் ஆசிரியர் முருகு சுப்ரமணியம், தமிழ்முரசு ஆசிரியர்கள், தமிழவேள் கோ.சாரங்கபாணி, அரசு சார், தமிழ்மலர் செல்வகணபதி என இவர்கள் யாருமே இன்று உயிருடன் இல்லை. ஆனால் அவர்கள் என்டெ தலையில் இட்ட அட்சதை, என்னை தளிர்ப்பித்த ஜீவரசம். மந்திரநீரால் அவர்கள் தூவிய பொன்தூவல். என்னை உய்விக்கும் இலக்கியம். இதற்கும் மேல் உவமித்து எதை எழுத? இக்கட்டுரைத்தொடர், வணக்கத்திற்குரிய என்டெ ஆசிரியர்களுக்கு மட்டுமே சமர்ப்பணம்.

[முற்றும்]

பி.கு: இன்றுவரை என்டெ கட்டுரைத்தொடரை பொறுமையாகப் படித்து, அவ்வப்போது ஊக்கமூட்டிய அனைத்து அன்பான நெஞ்சங்கட்கும், அருமையாய் பிரசுரித்த வல்லினம் இதழ் ஆசிரியர் குழுவுக்கும், என்டெ இதயம் கனிந்த நன்றி. (மகிழ்ச்சியான ஒரு செய்தி "கூத்துப்பட்டறையில்” எனும் தலைப்பில் இக்கட்டுரைத்தொடரை, தமிழ்நாட்டில் ஒரு பதிப்பகம் பிரசுரிக்க கேட்டிருக்கிறார்கள்.)

மாறா அன்புடன்,
கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>