முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  மொழியியல் ஒரு பார்வை ...3
வீ. அ. மணிமொழி
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

மொழியின் நோய்

பெரும்பாலும் திரைப்படங்களை நான் தேர்ந்தெடுத்துதான் பார்ப்பதுண்டு. அதிலும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து மூன்று மணி நேரம் திரைப்படங்களைப் பார்ப்பது மிகவும் அரிது. இதற்கு காரணங்கள் பெரிதாக ஒன்றுமில்லை. சலிப்புத் தன்மைதான். ஒரே மாதிரியான காதல் காட்சிகள், சண்டை காட்சிகள், பாடல்கள், வசனங்கள்... இன்னும் பல. அடுத்து என்ன சொல்லப்போகிறார்கள் அல்லது செய்யப்போகிறார்கள் என்பதை விரைவில் அனுமானித்து விடும் சக்தி இருப்பதாலோ என்னமோ.

இருப்பினும் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல இந்தித் திரைப்படம் கண்ணில் பட்டது. அண்மையில் தொலைக்காட்சி இரண்டில் அந்தப் படம் ஒளிப்பரப்பானது. அமீர்கான் நடித்த ‘Taare Zameen Par’.

கதையில் வரும் எட்டு வயது சிறுவன் இஷான் மிக சுதந்திரமாக பள்ளியில் மற்றும் வீட்டில் செயல்படுகிறான். அவனது குறும்புகள் எல்லையற்ற நிலையை அடையும் போது பள்ளி மற்றும் சுற்று வட்டார மக்கள் புகார் சொல்ல தொடங்குகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் அவனது சோதனை முடிவும் வெளியாகிறது. மூன்றாம் ஆண்டு சோதனையில் இரண்டாவது முறையாக வீழ்ச்சியடைந்ததும் தலைமையாசிரியர் அவனது பெற்றோர்களை அழைத்துப் பேசுகிறார். ஆத்திரமடைந்த அவனது பெற்றோர்கள் அவனிடம் எதைப்பற்றியும் விசாரிக்காமல் இஷானை ஹோஸ்டலுக்கு மாற்றுகிறார்கள். இதனால் அவன் மனமுடைகிறான். யாருடனும் பேசாமல் மௌனத்திலேயே காலங்களைக் கழிக்கிறான். அவனைத் திட்டி தீர்த்து களைத்துப்போன மற்ற ஆசிரியர்களினாலும் பெற்றோர்களினாலும் அவனுடையப் பிரச்சனைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் காட்டப்படவில்லை. ஒரு நாள் ஓவியப்பாட ஆசிரியராக அமீர்கான் ஹோஸ்டலுக்கு வருகிறார். அமீர்கான் அவனது மௌனத்தைக் களைக்கும் முயற்சியில் பிரச்சனைகளை ஆராயத் தொடங்குகிறார். இறுதியில் அவனுக்கு டிஸ்லெக்சியா (dyslexia) உள்ளதை அமீர் கண்டுப்பிடிக்கிறார்.

'டிஸ்லெக்சியா' ஒரு கிரேக்க மொழி சொல். தெளிவற்ற பேச்சு அல்லது வாசிப்பு என்பதே இதன் அர்த்தம். மூளையிலுள்ள ஒரு சில நரம்புகளின் பாதிப்புகளால் ஏற்படக்கூடியவை. இதை ஒரு வகையான எழுத்து சம்பந்தப்பட்ட நோய் எனலாம். இடப்பக்க மூளையில் (Cerebral Cortex) ஏற்படும் தவறான வினையாக்கம் அல்லது அப்பக்கம் சரிவர இயங்காமையின் காரணமாக வாசிப்பது, எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடுதான் அது. அதனோடு பிறவியிலே ஜீன்களின் மூலம் இந்நோய் கடத்தப்படுகிறது. இதனை Hereditary என்று அழைப்பர். இது 'Primary Dyslexia' என்றும் அழைக்கப்படுகிறது. பிறவிக்கோளாறு இல்லாமல், ஹார்மோன்களின் சுரப்பின் காரணமாக உருவாவது Secondary Dyslexia வகையாகும். இது சிறுவர்களிடம்தான் அதிகம் காணப்படும். ஆனால், இக்குறைபாடு வயதானால் குறைந்துவிடக்கூடும்.

இந்த நவீன அறிவியல் உலகத்தில், கருவிலேயே ஒரு குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு தீர்க்கப்படுகின்றன. டிஸ்லெக்சியா அப்படி அறிந்து கொள்ள முடியாத நோய். இருப்பினும், எதிர்காலத்தில் இது சாத்தியமாகலாம். காரணம், டிஸ்லெக்சியா வாசிப்பு, பேச்சு, எழுத்து என மூன்று திறன்களையும் அடக்கியவையாகும். இந்த மூன்று திறன்களில் ஏற்படும் பிரச்சனைகளை வரையறுக்கப்பட்ட குறைபாடுகள்தான் டிஸ்லெக்சியா. இந்த நோய்க்கான அறிகுறிகளை நான்கு வயதிற்கு பிறகே நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். காரணம், அந்தக் காலக்கட்டத்தில்தான், குழந்தைகள் பேச்சின் ஆற்றலை ஓரளவு முழுமையாக பெறுகின்றனர்.

'டிஸ்லெக்சியா' பிரச்சனைக்கு ஆளானவர்கள் பெரும்பாலும் அதிகம் பேச மாட்டார்கள். இவர்கள் மிகுந்த உச்சாகமாகக் காணப்படுவர்; தனிமையை விரும்புகின்றவர்கள். தனக்கென்ற ஓர் உலகத்தை அமைத்துக் கொண்டு அதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எழுத்து, பேச்சு, வாசிப்பு தவிர்த்த துறைகளில் சிறந்து விளங்குவர்கள். அவர்களின் பேச்சில் தெளிவு குறைந்து காணப்படும். அதனோடு அவர்களால் சரியாக எழுதவோ வாசிக்கவோ இயலாது. இவர்கள் வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக வாசிக்க தொடங்குவார்கள். காரணம் அவர்கள் கண்களுக்குச் சில எழுத்துகள் சருக்களாகவோ, குறுகளாகவோ, தலைகீழாகவோ அல்லது திருப்பியோ தென்படும். உதாரணத்திற்கு, ய,ர,ம,ட என்ற எழுத்துகள் இந்த (1) வடிவத்தில் தெரியும். அதேபோல்தான் சில எண்களும் அவர்களுக்கு உருமாறி தெரியும். அதாவது 3, 7, 6, 9 என்ற எண்கள் (2) ஆக தெரியும். பெரும்பாலும் இறுதி வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களிடையே இந்தப் பிரச்சனைகளைக் காணலாம். ஆசிரியர் மாணவர்களின் எழுத்தமைப்பைக், கட்டுரைகளில் ஏற்படும் எழுத்துப்பிழை மற்றும் பேச்சு, உச்சரிப்பு என திறன்களை ஆய்வுசெய்வதன் மூலம் இந்நோய் கண்டுப்பிடிக்கப்பட்டு தீர்க்கலாம். இருப்பினும் இதற்கு காலமும் பல உத்திகளும் தேவைப்படும்.

மொழி எனப்படுவது வெறும் பேச, தொடர்ப்பு கொள்ள பயன் படுத்தப்படும் சாதாரண கருவி மட்டுமல்ல. ஒவ்வொருவரின் மொழியும் தனித் தன்மை கொண்டவை. அதனை ஆய்வு செய்து பார்த்தால் பல அமைப்புகள் (pattern) அதில் தென்படும்.

பரவலாக பலர் அறிந்து வைத்திருக்கும் மொழிக்கும் ஒரு மொழியியலாளரின் பார்வையில் உள்ள மொழிக்கும் வித்தியாசங்கள் உண்டு. வெறும் இலக்கண மரபுகளை மட்டும் கொண்டு ஒரு மொழியை வாழ வைத்திட முடியாது. மொழியில் அவ்வப்போது காணப்படுகின்ற டிஸ்லெக்சியா போன்ற அறிகுறிகளை நீக்குதலும் அவசியம் தான்.

 

 

 

 

 

 

 

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>