முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 27
மார்ச் 2011

  வழித்துணை ...3
ப. மணிஜெகதீசன்
 
 
       
நேர்காணல்:

'பிரதியின் ஜட்டியைக் கழற்றி பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது?'

லீனா மணிமேகலைகட்டுரை:

ஏழாம் திணையில் எழுந்த புரட்சி!
கெ.எல்.பத்தி:

மலேசிய பிரதமருக்கு ஒரு கடிதம்
கே. பாலமுருகன்

இலங்கைத் தமிழ் மீனவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் : சிந்திக்கவேண்டிய சில வினாக்கள்
ரவிக்குமார்
சிறுகதை:

விரல்
கமலாதேவி அரவிந்தன்

எதைத்தான் தொலைப்பது?
குரு அரவிந்தன்கேள்வி பதில்:

சாரு பதில்கள்
சாரு நிவேதிதாபெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...9
எம். ஜி. சுரேஷ்

நடந்து வந்த பாதையில் ...16
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

புலம் பெயர் வாழ்வு
இளைய அப்துல்லா

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

மொழியியல் ஒரு பார்வை
வீ. அ. மணிமொழி

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி'நேர்காணல்' இதழில் வெளிவந்த எழுத்தாளர் வண்ணநிலவனின் நேர்காணல்கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...17

சபரிநாதன்

செல்வராஜ் ஜெகதீசன்

எம். ரிஷான் ஷெரீப்

தோழி

கே. பாலமுருகன்

நிகழ மறுத்த அற்புதம்

 'பாலம்' எனும் தலைப்பில் நக்கீரன் ஒரு சிற்றிதழை நடத்தியிருக்கிறார். நான் பார்த்ததில்லை. அதன் முகப்பு ஒவ்வொன்றிலும் சண்டகான் நகரின் பாலங்கள்தான் அலங்கரித்துள்ளன. அவ்வளவு பாலங்கள். குறிப்பாக கடலின்மேல் காலூன்றி அமைக்கப்பட்டிருந்த வீடுகளை இணக்கும், மரத்தால் ஆன பாலங்கள். நீங்கள் வெனீஸில் இருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ளுங்கள்; நீராலான தொடர்பு அங்கு; பாலங்களால் ஆன இணைப்பு இங்கு. (எல்லாவகையான கழிவுகளும் சங்கமிக்கும் இடமாதலால்... வெனீஸுடனான மேற்கண்ட ஒப்பீட்டை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்!) அங்கிருந்த நான்காம் ஆண்டில்தான் `ஏழாம் உலகத்தைப்` பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கடற்கரையில் அமைந்த குடிசைப்பகுதியில் மிக வித்தியாசமான சமூகக் கட்டமைப்பில், நிழல் உலகொன்றைக் கண்டேன். மிக நெருக்கிய, சகல அடிப்படை வசதிகளும் நிராகரிக்கப்பட்ட சூழலில் மிக இயல்பாக வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மக்கள். சொந்த நாட்டின் சமூக விளிம்பில் மூச்சடைத்து, வெளியில் துப்பப்பட்டவர்கள்.

பெருப்பாலும் இந்தோனேசியர்களும், பிலிப்பினோக்களும். கடப்பிதழ், விசா போன்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என்ற பரந்த மனப்பான்மையோடு வாழ்பவர்கள்! அவர்களின் இருப்பை அறிந்தும் அறியாததுபோல் வாழக் கற்றுக்கொண்டுவிட்ட உள்ளூர் மக்கள்; எத்தனை தடுப்புகள் போட்டாலும் அதில் துளைப்போட்டு பணம் பண்ணிவிடும் சாமர்த்தியமான அரசாங்க அமலாக்க அதிகாரிகள். அப்புறம், `டான்`கள் (Don), அல்லது நீங்கள் விரும்பினால்,`தொடர்புத்துறை அதிகாரிகள்` என்றும் அழைக்கலாம். அவர்களுக்கு எதுவும் சாத்தியம். மது - மாது - மணி (money... சும்மா ஒரு sound effect-காகத்தான்..) என்ற மூன்று பாரிய அழிவாயுதங்களைக் வைத்துக்கொண்டு அவர்கள் நடத்தும் நிழல் ராஜ்ஜியம், சொல்லி மாளாது. அவர்களின் ஆடுகளம் ரொம்பவும் விஸ்தாரமானது. நக்கீரன் `கண்ண`னாகி மலேசியக் குடிமகனானது உட்பட! (நான் அங்கு போய்வந்ததைக் கேள்விப்பட்ட ஒரு போலிஸ் நண்பர், திரு. நாராயணன் @ நாரா, கூறிய `உண்மைச் சம்பவங்கள்` எந்தக் கொம்பனையும் கலங்கடிக்கும்.)

வெறும் 10 மலேசிய ரிங்கிட்டுக்கு ஆளையே போட்டுத் தள்ளிய சம்பவங்கள் சாதாரணம். அப்புறம் இன்னொரு முக்கியச் செய்தி. என்னையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்த தமிழ்ப் பெண் ஒருத்தியைக் கண்டேன். தமிழர்களே அரிதாகக் காணப்படும் ஊரில், இப்படிப்பட்ட இடத்தில் நம்பப் பொண்ணு. எப்படி? அதை நக்கீரனும் பார்த்தார். அப்புறம் சொன்னார், அவள் ஒரு பாலியல் தொழிலாளி. (இதற்கு ஒரு வலி நிறைந்த பின் கதை உள்ளது. இன்னொரு சமயத்தில் அதைப் பற்றி எழுதுகிறேன்)

ஏதோ ஒரு குகைப் பிரதேசம் போலவும், பல தடுப்புகளால் ஆன உள் கட்டமைப்புடனும் இருக்கும் இந்த இடத்தில்தான் நக்கீரனும் கொஞ்ச நாள் இருந்தார்.

முதல் தடவை அவர் பின்னால் அங்கு போனபோது, ஏதோ மர்மப் பிரதேசதில் பிரவேசித்தது போன்ற உணர்வு; போனால் திரும்பி வருவது நிச்சயமல்ல, போய்த்தான் ஆகணுமா... பல்வேறு சிந்தனைகள் கண்டிப்பாக மனதில் ஓடும். 'நான் கடவுள்' படக்காட்சிகளை கொஞ்சம் மனத்திரையில் ஓடவிட்டுப் பாருங்கள்! அதனால்தானோ என்னவோ, நக்கீரன் நிறைய சஸ்பென்ஸ் கதைகளை எழுதியிருக்கிறார். அந்த இருண்ட பிரதேசத்திலும் உலக இலக்கியங்களைப் பற்றிதான் பேசினோம். அபாரமான ஞாபகச் சக்தி, கூர்மையான அவதானிப்பு, கொஞ்சம் பிடிவாதம், கொள்கையில் நேர்மை... இதுதான் நக்கீரன்.

எங்கள் நோக்கமில்லாப் பயணங்கள் எல்லாமே மிகவும் மகிழ்ச்சியான அனுபவங்கள். இருவரும் `மரக்கறி`யர்கள். அவர் காப்பி, தேநீர் கூட குடிக்கமாட்டார். எனக்கு தேநீர் அருந்தாத நாளெல்லாம் வீணான நாட்கள். எங்கெல்லாம் மனதுக்கு இதமான அமைப்பில் ஸ்டால்கள் தென்படுகிறதோ அங்கே அமர்ந்துவிடுவது வழக்கம். சமயங்களில், சண்டகானில் அதிகம் காணப்படும் home stay-களில் (சுற்றுப்பயணிகள் தங்கிச் செல்ல, குறைந்த கட்டணத்தில், தங்கள் வீடுகளில் வசதிகள் ஏற்படுத்தித்தரும் திட்டம்) அமர்ந்து, அந்த வீட்டுக்காரரைப் பேட்டி கண்டு, ஊர்க்கதைகள் பேசி, பசித்த வயிறோடு, சூரியனைத் தொலைத்துவிட்டு, வீடு வந்து சேர்வோம். (பல ஆண்டுகள் வெட்டுமரத்துறையில் வேலைச் செய்திருப்பதால், மரங்களின் பெயர்கள், தன்மைகள், பயன்கள், விலை, எவ்வளவு கொள்ளையடிக்கப்படுகிறது போன்ற விவரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். நக்கீரனின் குடும்பப் பின்னனி திராவிட இயக்கப் பின்னனி கொண்டது. அவர் பெரியாரின் மடியில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்த்திருக்கிறேன்; நக்கீரனென்று பெயர் வைத்தவரும் அவர்தான். சிங்கப்பூர் மின்சார இலாகாவில் பணியாற்றிய தந்தையார் ஒருமுறை வீடு திரும்பியபோது எல்லாமே சட்டென்று ஆன்மீகமாய் மாறிவிட்டதாகவும் கூறக்கேட்டிருக்கிறேன். ஆகையால் எங்கள் உரையாடலில் பல திராவிடத் தலைவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள்)

நினைவுகளை மீட்டெடுக்கையில் மிகவும் தெளிவாக தெரிவது எங்களுக்கிடையில் எந்தச் சச்சரவுகளோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. இருவருமே கிருஷ்ண பக்திக் கழகத்துடன் தொடர்பு வைத்திருந்தோம். கோட்பாட்டு ரீதியில் ஒரே தளம், நோக்கு. அசிந்திய பேத அபேத தத்துவத்தைச் சார்ந்த உரையாடல்களே பெரும்பாலும். மாற்றுக் கோட்பாடுகள், தத்துவங்கள் பற்றி எந்த எதிர்மறைச் சிந்தனையும் இல்லை. உன் வழி உனக்கு; என் வழி எனக்கு. நான் விரும்பி வாசித்த ஆதவன், தி.ஜா, அசோகமித்திரன், சு.ராவை அவரும் விரும்பி வாசித்தார். முதல் சந்திப்பிலேயே படித்த கதைகள் பற்றிதான் பேசினோம்; கடைசியாகச் சந்தித்தபோதும்தான்.

சண்டகான் விநாயகர் ஆலயத்தில் தமிழ் வகுப்பெடுத்த அனுபவமும், ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக நடத்திய மகிழ்ச்சியான நாட்களும் பயணத்தின் சிடுக்குகளில் சிக்காமல் கடந்து செல்ல பெரிதும் உதவின. `பாரும்`, `பீரும்` பெருகிய நிலத்தில், `டீ` யடித்தும், கீதைப் படித்தும் (இன்னும் படித்து முடிக்கவில்லை!) வாழ்க்கையை `வீணடித்த` எனக்கு என் சக நண்பர்கள் வைத்த பெயர் `சாமி`! (நான் இல்லாத வேளைகளில் `கேனையன்` என்றுதான் சொல்லியிருக்கக்கூடும்) என்னையெல்லாம் போய் சாமி என்றழைத்தது காலக் கொடுமையல்லாமல் வேறென்ன!!

பண்டார் ராமாய்-ராமாய் `செத்த கடலின்` சந்திப்பு ஒன்றில்தான் எங்களின் கனவான இந்தியப் பயணம் பற்றிப் பேசினோம். 1993-ல் என நினைக்கிறேன். புகழ்ப் பெற்ற வைணவத் தலங்கள், பார்த்தே ஆகவேண்டிய மற்ற கோவில்கள், எழுத்தாளர்களைக் கண்டு உரையாடுதல் எனத் திட்டம். 55 நாள்கள். மொத்த இந்தியாவையும் பார்த்துவிடுவது. எங்களின் பயணத் திட்டத்தின் சாராம்சம் இதுதான். அடுத்தடுத்த சந்திப்புகளில் பயணம் பற்றியே பேசினோம். பார்க்கப் போகிற ஒவ்வொரு இடத்தைப் பற்றியும், எழுத்தாளரைப் பற்றியும் தொடர்ந்து உரையாடினோம்.

ஒரு நாள், கையில் கற்றைத் தாளுடன் வந்தார்.

வழக்கமாக ஏதாவது எழுதி எடுத்துவருவார். விவாதிப்போம். நல்ல கதைகளை அடையாளம் காண்பதில் இருந்த தேர்ச்சி எழுத்திலும் அவருக்கு வாய்த்திருந்தது. அலாதியான உத்திகளைப் பயன்படுத்துவார். முன்வைக்கும் விமர்சனக் கனைகளை தடுத்து நிறுத்தத் தேவையான அறிவும், திறமையும் உண்டு.

ஆனால் இம்முறை அவர் கொண்டுவந்தது எங்கள் 55 நாள் இந்தியப் பயணத்தின் முழுமையான (comprehensive) செயலாக்கத் திட்டம்! மொத்தம் 35 (A4) பக்கங்களில். ஒவ்வொரு நாளும் செல்லும் இடம், அதன் லௌகீக/ஆன்மீகச் சிறப்பு, அங்கு வாழும்/வாழ்ந்த புகழ்ப் பெற்ற எழுத்தாளர், ஈர்க்கும் இடங்கள், அங்கு என்ன திரைப்படப்பிடிப்பு நடந்தது போன்ற பல்வேறு தகவல்களின் தொகுப்பு அது.

அந்தப் பயணம் பல்வேறு காரணங்களால் ஈடேறவில்லை.

ஆனால், அவர் தயாரித்துக் கொடுத்த திட்டத்தை ஒரு மிக முக்கிய ஆவணம் போல் இன்னும் பாதுகாப்பாக வைத்துள்ளேன். எத்தனையோ முறை மீள்பார்வை செய்திருப்பேன். என் வாழ்க்கையில் நிகழ மறுத்த அற்புதம் அது. அதைப் பற்றிப் பேசித்தீரா பொழுதுகள் எத்தனையோ.....

2001 டிசம்பரில் இந்தியப் பயணம் சாத்தியமானபோது, அதன் அடிப்படை ஏற்பாடுகளையும் நக்கீரன்தான் செய்து கொடுத்தார். அதுவும் ஓர் அலாதியான அனுபவமே.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768/span>