|
வல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்
கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்
வல்லினம் பதிப்பகம் ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் கலை
இலக்கிய விழா இவ்வாண்டு 'வரலாற்றை மீட்டுணர்தல்' எனும் தலைப்பில்
கடந்த 5.6.2011-ல் செம்பருத்தி இதழ் ஆதரவுடன் நடைபெற்றது...
புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்
இன்றைய சூழலில் ஈழத்தைப் பற்றிய எவ்வித உரையாடல்களுமே எனக்கு
மிகுந்த சங்கடத்தை அளிக்கிறது. தற்போது ஈழத்தில் நிகழும்
விடயங்களைப் பற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியாதென்பதாலும் நம்
காலத்தின் ஆக பெரிய மனித அவலத்தின் சாட்சியாக...
புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை
நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்
கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி அவர்கள்,
அந்தச் சமூகத்தைச் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களையும் அந்த வட்டார
வழக்கில் பாடப்பட்ட பாடல்களையும் அதனுடன் ஒலிக்கும் வரலாற்றுப்
பதிவுகளையும் மிகவும் நேர்மையாக ஆவணப்படுத்தியுள்ளார்...
புத்தகப்பார்வை
தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகி
சாவுகளால் பிரபாலமான ஊர், இதை விவரித்து சொல்வதென்றால் பிணங்களால், மரணங்களால் பிரசித்திப்பெற்ற நகரம். அல்லது மாநிலம் அல்லது நாடு. எவ்வாறான மரணங்கள்? நோயால் அல்லது விபத்தால் அல்லது இயற்கையால் ஆன மரணமா? இல்லை. எப்படியெல்லாம் நிகழக்கூடாதோ அப்படியெல்லாம் நிகழ்ந்த மரணங்கள்...
பத்தி
வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.
பயணிகளுக்கு மட்டுமின்றி, நவீன மயமாக்கலுக்கு முந்தய சிங்கப்பூரின் காற்றைச் சுவாசிக்க விரும்புபவர்களும் தேடி வரும் சரணாலயமாக பல ஆண்டு காலமாகத் திகழ்ந்து வந்த தஞ்சோங் பகார் ரயில் நிலையம் ஜூன் 30ம் தேதியுடன் செயல்பாட்டை நிறுத்தியது...
ரஜினியின் தற்கொலை
ம. நவீன்
நண்பர் சந்துருவிடமிருந்து வந்த குறுந்தகவலை ஒருதரம் உரக்க வாசித்தபோது வீடு நிசப்தமானது. அந்நிசப்தத்தினூடே நான் சந்துருவை அழைத்துக் கேட்டபோது, விவரம் அவர் சொல்லும் வரை எனக்குத் தெரியாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார்...
பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவா
சற்று தொலைவில் நிற்கும் செங்கல் ஏற்றிச் சென்ற கனவுந்துகள் சிதறியச் செம்மண் தூசு படர்ந்த செம்பனை மரங்கள். பெயர் மறந்து போன மூதாதையர்களின் செல்லரித்துப்போன புகைப்படங்களைப் போல இன்னமும் மங்கலாகவும் அழுக்காகவும் அங்கேதான் நிற்கின்றன. வெளிவரவிருக்கும் உங்களது நூலில் இந்த 'ஒரு காலத்தில்' பால் சுரந்த மரங்களையும், குலை தள்ளிய பனைகளையும் பற்றி கொஞ்சமாவது எழுதுவீர்கள்தானே...
|
|
கேள்வி பதில்
பெற்றோல்
(இப்போதைய "தலையங்கம்")
கவிதை
தொடர்
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்
ஒரு வெகுஜனப்பத்திரிகையில், ஒரு எழுத்தாளர் பின் நவீனத்துவம் பற்றி எழுத விரும்புகிறார்; அதற்கு அந்த இதழும் இடம் தருகிறது என்றால் என்ன அர்த்தம். பின் நவீனத்துவமும் ‘போணி’யாகக் கூடிய சரக்காக மாறிவிட்டது என்பதுதானே பொருள்....
சிறுகதை
பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்
கறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான அட்டைக் கறுப்பு. அட்டை, கறுப்பு நிறமா என்றெல்லாம் நீங்கள் கேட்கக் கூடாது. அது எனக்குத் தெரியாது. அவள் கறுப்பு நிறம். அவ்வளவுதான். ...
|
|