இதழ் 15
மார்ச் 2010
  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5
ருமேனிய மூலம் : இயோன் அலெக்ஸாண்ட்ரு | தமிழில் : இளங்கோவன்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

போர் நிறுத்தம்

நான் பிறந்தபோது
போர் முடிந்தது
இறுதி ஆணைகள் சுடப்பட்டன
பீரங்கிகள் தத்தம் நிழலில்
தூக்கிலிடப்பட்டன
என் வீட்டில்
பரிசுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன

'முதலில் உனக்கு ஜான்
நன்றியுடன் நீயெனக்குப் பாடுபட்டதால்
எனது ஞாபகார்த்தமாகப் பொருத்துகிறேன்
ஓக் மரத்தின் உச்சரிப்பான
இம்மரக் காலை...
நலமுண்டாகட்டும்!
நீ மரித்தால் சகோதரவுணர்வோடு
மரங்கள் தாலாட்டும்
உச்சி முகரும்
உனது வலக்கரம்...?
ஞானநூல் எதையும் தொடாததால்
அதைக் கழட்டி மண்ணுக்குக்
கொடுத்துவிட்டேன் எழுதிக்கிறுக்க,'
என்றது மேசைமூலையில் இருந்த
போர் அப்பாவைப் பார்த்து

மரியா உனக்கு...
எனது குதிரைகளை உன்
கண்ணீரில் குளிப்பாட்டியதால்;
உன்னிரு மகன்களை
என் பூட்ஸ் துடைக்க
போர்க்களத்திற்கு அனுப்பியதால்,
உன்னிரு மகள்களின்
இரவுகளை நான் சுவைக்கவிட்டதால்
அட பாரேன்!
அள்ளிமுடிக்க நரைமூழ்கிய கூந்தலும்
ஆறுதலுக்கு தூக்கம்போன இராத்திரிகளும்
யாருக்காம்... உனக்குத்தான்
என்றது போர் அம்மாவைப் பார்த்து

குன்றுக்கப்பால் குடியிருக்கும்
பீட்டரின் மகனே ஜார்ஜ்...
செவ்விழியோன் என
செம்மாந்திருந்தாயே ஒருமுறை
ஒன்றென்றும் நீயும்
உன் மனைவியும்
அறுவடை செய்ய
காரிருளின் எல்லைகளை உனக்கு
உயிலெழுதி வைத்து விட்டேனே

இக்கிராமத்திற்கு!
நாற்பது அனாதைகள்
ஆறு மாதத்திற்குள்
பத்து காலியான மீதி இடிந்த வீடுகள்;
அஸ்தமனம் பார்த்த
அரைவேக் காட்டில் வெந்த வானம்
மணியற்ற கூண்டு;
தலைகீழாய் தொங்கும்
இளம்பெண்கள் எண்மரை
ஏந்திய இடுகாடு;
அண்டை வீட்டானின்
சுவாசம்போய் ஊறும்
இருபது புரவிகள்

உனக்கோ!
இன்று பிறந்த உனக்கோ!
நமக்கு முன்பின்
அறிமுகம் இல்லாததால்,
பசுக்கள் மடி வரண்டு போகவும்
பழமரங்கள் தோட்டத்தில் எரிந்து போகவும்
கிணற்றின் கண் அவிந்து போகவும் விடுகிறேன்

வானம் உனக்கு
நட்சத்திரம் ஊட்டட்டும்...
ஆண்டவன் பெயரால்
நான் ஞானஸ்நானம் பண்ணுகிறேன்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768