இதழ் 18 - ஜூன் 2010   புத்தகப்பார்வை : மனக்கரையில் லங்காட் நதிக்கரை
க. ராஜம்ரஞ்சனி
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

மலேசிய மூத்த எழுத்தாளர் அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரையில்’ தூரத்தில் மலேசிய வரலாற்றில் ஒரு சிறு புள்ளியாக தெரிந்தாலும் அதனுள் உட்புகுந்தபோது நான் சிறுபுள்ளியாகி போனது உண்மை. காலம் கடந்த பார்வையாக இருப்பினும் லங்காட் நதிக்கரை என் மனக்கரையில் என்றென்றும் பசுமை நிறைந்ததாய் உள்ளது. மலாயா வரலாற்றில் நம்மவர்கள் கடந்து வந்த பாதை துயரங்கள், வேதனைகள், தியாகங்கள் நிறைந்தது. 1945ம் ஆண்டு ஜப்பானியர் ஆட்சியிடம் விடுபட்டது மலாயா. ஆங்கிலேயர் வந்து சேர்வதற்குள் கம்யூனிஸ்ட் படை ஆட்சி சுமார் இரு வாரங்கள் நீடித்தது. அத்தகைய இக்கட்டான வாழ்க்கை சூழலை நம் கண் முன் நிறுத்துகின்றது இந்நாவல்.

இந்நாவலில் வாழ்ந்த வரலாற்று மனிதர்களுடன் நிகழ்கால மனிதர்களையும் இணைத்து அவர்களுள் ஒருவராய் என் மன உலகில் வாழ்ந்து பார்த்தேன். அந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக இப்படைப்பின் பிறப்பு.

வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள், மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை, உணர்வுகள் யாவுமே அற்புதமானவை. வரலாற்று பூர்வீகப் பொருட்களைச் பாதுகாக்கின்றன அருங்காட்சியங்கள். மக்களின் வாழ்க்கை முறை, வசிப்பிடம், உணவு போன்ற விஷயங்களை அறிய செய்வது வரலாற்று பாடம். வரலாற்று மனிதர்களின் உணர்வுகளைப் பதிவு செய்து நமக்குத் தருவது நாவல்களே. வெற்றிகரமாக பதிவு செய்த நாவல்கள் வரிசையில் இந்நாவலும் வெற்றியைத் தழுவிக் கொண்டதை உறுதியாக கூறலாம். லங்காட் நதிக்கரையில் புலம்பெயரும் வெள்ளையனின் குடும்பமும் உறவுகளும் நம்மிடையே வாழும் ஒரு குடும்பமாகவே வந்து போகின்றனர். அம்மக்களிடையே பணத்தை விடவும் குணம் பெருகி குவிந்திருப்பதைக் கதையினூடே அறிய முடிகின்றது. அதுவே அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கும் நிம்மதிக்கும் அடித்தளமாகின்றது. மனிதத்தன்மை கால மாற்றத்திற்கேற்ப மாசடைந்து விட்டதா என்ற சந்தேகம் விடாமல் தொடர்கின்றது. அதற்குக் காரணம் இந்நாவல் வெறும் வரலாற்றை மட்டும் என் கண்ணின் முன் காட்டாமல் அதையும் தாண்டி மனதினுள் ஆழ்ந்து சென்று உணர்வு கோர்வையாய் உருப்பெற்றுவிட்டது.

‘ஒரு மனுசனுக்குத் தாங்க முடியாத துன்பம் வந்துட்டா அழுவான். ஆனா அதே துன்பம் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்தால் அப்புறம் அவன் அழமாட்டான். சிரிப்பான்! ஏன்னா துன்பத்தோட எல்லைய தாண்டிப்போயிட்டா அழ முடியாது. சிரிக்கத்தான் முடியும்! அந்த மாதிரிதான் இப்ப நானும் இந்தியக்காரங்களை நினைச்சு சிரிச்சேன். அதுதான் உண்மை’ என்ற நாவலின் வரிகளைக் கடக்க முயல்கையில் மௌனத்தின் ஊடே மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலிப்பதாய் இருந்தது. துன்பங்கள் தொடர்ந்து இந்தியர்கள் வாழ்க்கையைத் தாக்கிக் கொண்டிருக்க, அவர்கள் துன்பத்தின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும். அவர்களுள் இக்கணம் உடல், உள வலிமை அதிகரித்திருக்கும்.

அக்காலந்தொட்டே நம்மவர்கள் திறமை வாய்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். அத்திறமைகளை வெளிகொணரும் பாகங்கள் இந்நாவலில் ஆங்காங்கே உதிர்ந்து கிடப்பது சிறப்பு. வேட்டை தொழில் மட்டுமல்லாது நண்டு பிடிக்கும் கலையையும் அவர்கள் அறிந்திருந்துள்ளனர். கல்வியின்றி கலைகளில் சிறந்த நம்மவர்களின் திறமைகள் அருமை. நேரத்தை வீணே கழிப்பது நம் சமூகத்தில் இல்லாதிருப்பது மற்றொருமொரு இன்பம்.

மக்கள் ஒவ்வொரு நாளையும் கடத்துவது தீயின் மீது நடப்பதாய் உடலெங்கும் உஷ்ணம் பரவி உள்ளத்தையும் நெகிழ வைத்தது. வெள்ளையனை குடும்பத் தலைவராக மதிக்கும் சக உறவுகளின் ஒற்றுமை இந்நிமிடம் நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது. இனங்களுக்கிடையிலான சுமுகமான நல்லுறவு அக்காலக்கட்டத்திலேயே வலுப்பெற்றிருப்பது பல இன கதாபாத்திரங்களின் புரிந்துணர்வாய் வெளிப்படுகின்றது. இந்தியர்களின் உடல் உழைப்பு மன, உள திடகாத்திரத்திற்குத் துணை புரிந்திருப்பது கதையில் சொல்லபடாவிட்டாலும் இன்றைய உலக நிலையைச் சற்று திரும்பிப் பார்க்கும்பொழுது நாமே உணர்ந்து கொள்ள முடிகின்றது. மரவள்ளிக் கிழங்கு, காப்பி, கருப்பெட்டி, சோளக்கஞ்சி, தேங்காய் துவையல் என நமக்கு எளிதில் கிடைக்கும் துரித உணவுகளைவிட மதிப்புக்குரியதாய் இடம்பெற்று விட்டது. ஆவத்தாளின் விருந்தோம்பல் குணம் படைத்த மனம் பாராட்டுக்குரியது. இன்று விருந்தோம்பல் என்றதொரு பழக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகத் தொடர்கள் ஆகியவற்றின் முன் மெல்ல அழிக்கப்பட்டு வருகின்றது. இவற்றிற்குத் தரப்படும் முக்கியத்துவம் விரும்தோம்பலுக்கு இல்லாமல் இருப்பது வியப்பாக உள்ளது.

இவையாவும் நடந்து சுமார் 65 ஆண்டுகள் மறைந்துவிட்ட போதிலும் அக்கட்டத்தில் வாழ்ந்த மக்கள் குறிப்பாக லங்காட் நதிக்கரையில் வாழந்த மக்களின் மனதில் என்றென்றும் நீங்காமல் இருந்துகொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்நாவலின் முற்றை அடைந்து விட்ட பிறகும் அதன் சாரம் என்னுடன் உலவுகின்றது. அவ்வப்போது இன்றைய காலகட்டங்களை எதிர்நோக்கும்போது நாவலின் பகுதிகள் சில விஷயங்களைச் சிந்திக்கவே செய்கின்றன. தாங்களும் தங்கள் இனமும் தங்களைச் சுற்றியிருப்போரையும் அரவணைத்துக் கொண்ட வரலாற்றுச் சமூகத்தின் பால் அன்பு கூடுகின்றது. நிகழ்கால மனிதர்களுக்கிடையிலான பகைமை அதிகரித்து உயிரின் மதிப்பறியாமல் விளையும் பாதகங்கள் நெஞ்சினுள் பாரமாய் அழுத்துகின்றது. நம் மூதாதையர் இன்றைய நடைமுறை வாழ்க்கையைப் பார்க்கும் சக்தி அமைந்திருந்தால் அவர்கள் அனுபவித்த கொடுமைகளையும் விட பன்மடங்கு துயர்கொள்வர் என்பது உறுதி. நாமும் எதிர்காலத்தில் வரலாறாக உருவெடுக்கும் தருணத்தை எண்ணிப் பார்க்கையில் அச்சமும் வெறுமையும் மட்டுமே மிஞ்சுகின்றது.

பயமும் கொடுமையும் தோய்ந்த தினசரி வாழ்க்கை அம்மக்களின் மனிதத்தைச் சிறிதும் குறைய செய்யாமல் இருப்பது இன்றைய சூழலில் எனக்குப் பெருமிதத்தைத் தருகின்றது. லங்காட் நதிக்கரை மக்களின் மனங்களுக்கு என் மனம் ஏங்குகின்றது. என்றென்றும் என் மனக்கரையில் லங்காட் நதிக்கரை.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768