இதழ் 18 - ஜூன் 2010   ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

சத்தியக்கட்டு

சத்தியக்கட்டு எழுத்தாளர் இமையத்தின் வீடியோ மாரியம்மன் சிறுகதை தொகுப்பிலுள்ள சிறுகதை. சிறுகதையானது 41 பக்கங்கள் கொண்டது. 41 பக்கங்களும் நேர்த்தியானவை. ஏதோ ஒரு தகவலை தருவதாகவே ஒவ்வொரு பக்கங்களும் இருக்கின்றன.

வருடத்தின் ஒருநாள் பொன்னருவி கோவிலுக்கு பொங்கல் வைத்து சாமி கும்பிட குடும்பம் குடும்பமாக செல்கின்றனர். பொங்கல் வைக்கும் அன்று அந்த ஊரில் மழை பெய்வது வழக்கம். பொன்னருவி கோவிலை சுற்றி தற்காலிக கடைகள் அமைக்கப்படுகின்றன. பெண்கள் அனைவரும் பொங்கல் வைக்க தேவையான பொருட்களை சேகரித்த வண்ணம் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலிருக்கும் பெரியவர்களும் 'சீக்கிரம் பொங்கலை வச்சி முடிங்க, மழை வந்துட்டா பிறகு கஷ்டம்' என்று பொங்கல் வைக்கும் பெண்களிடம் கூறுகின்றனர். வேப்பமரம், அரச மரமென ஜம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் கோவிலை சுற்றி இருக்கின்றன. கோவிலின் பக்கத்தில் பொட்டைக்குளம் என்றொரு குளம் இருக்கிறது. பெண்கள் குளத்தில் குளித்து கோவிலை சுற்றி வருகின்றனர். பொன்னருவி கோவிலிலுள்ள பெண் தெய்வம் யார்? கோவிலை சுற்றி மரங்கள் அமைத்தது யார்? பொட்டைக் குளத்தின் கதை என்ன? போன்ற கேள்விகளுக்கு விடை தரும் விதமாக சிறுகதையானது விரிகிறது.

நாகம்மாளும் அவள் கணவரும் சின்னச்சாமி படையாச்சியார் வீட்டில் வேலை செய்து வருகின்றனர். நாகம்மாளின் கணவர் இரவில் வயலை காவல் காக்க சென்றிருந்த போது திருடர்கள் வயலின் விளைச்சலை திருடிச்செல்ல முயல்கின்றனர். நாகம்மாளின் கணவர் திருடர்களை பார்த்து கூச்சலிடுகிறான். அவனை சப்தம் போடாமல் தடுக்க அவனை வரப்பில் வைத்து அமுக்குகின்றனர் திருடர்கள். மூக்கின் வழியே மண் சென்று செத்துவிடுகின்றான். அவன் இறந்த போது நாகம்மாளின் வயிற்றில் பொன்னருவி ஆறுமாத கருவாக இருக்கிறாள். பொன்னருவி சாப்பிட, தூங்குவதை தவிர மற்ற நேரங்களில் சின்னச்சாமி படையாச்சியின் வீட்டில் வேலை செய்கிறாள். சின்னசாமி படையாச்சியின் மகன் பொன்னருவின் வயிற்றில் குழந்தையை கொடுத்துவிடுகிறான். இந்த விஷயத்தை மறைக்க பொன்னருவியை வேற ஊருக்கு அழைத்து செல்கிறாள் நாகம்மாள். அது சரிபட்டு வராதென்று மீண்டும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறாள். விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக ஊருக்கு தெரிந்துவிடுகிறது. பொன்னருவி கீழ்சாதி பெண் என்பதால் அவளுக்கும் மேல் சாதி சின்னச்சாமி படையாச்சி பையனுக்கும் திருமணம் எப்படி சாத்தியம் என்று ஊருக்காரர்களிடம் ஒரே பேச்சாக இருக்கிறது.

பொன்னருவியின் விஷயம் அருகிலுள்ள ஊர்களுக்கும் தெரியவருகிறது. பொன்னருவி ஊரில் பலரின் தூக்கத்தை கெடுக்கிறாள். பொன்னருவிக்கும் சின்னச்சாமி படையாச்சி மகனுக்கும் திருமணம் முடித்து வேற ஊருக்கு அனுப்பி அங்கேயே வாழச்செய்ய ஊர் பெரியவர்கள் கூடி முடிவு செய்கின்றனர். வேற ஊருக்கு போவதாக கூறியிருந்த நான்கு மணி நேரத்திற்கு முன்பு பொன்னருவியின் உடல் பொட்டைக்குளத்தில் மிதப்பதாக தெரியவருகிறது. பொன்னருவி எப்படி இறந்தால் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

பொட்டைக்குளத்தில் அதன் பின்பு பல பேரின் உடல் மிதக்கிறது. மனிதர்களை தவிர தண்ணீர் குடிக்க சென்ற 3 மாடுகள் செத்துப்போகின்றன. இரவு நேரத்தில் குளத்தங்கரையில் பெண்ணின் அழுகுரல் கேட்பதாக ஊருக்குள் பரவலாக பேசப்படுகிறது. இந்த நிகவின் தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு வந்தவனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியிலே இறந்துவிடுகிறான். கற்பமான பெண்களில் சிலருக்கு கரு கலைகிறது. பிள்ளை பெற்றவர்கள் சிலருக்கு குழந்தை இறந்தே பிறக்கிறது. ஊரில் நடக்கும் அபசகுணமான நிகழ்வுகளுக்கெல்லாம் பொன்னருவியின் சாவு காரணமென்று பஞ்சாயத்தில் பேசுகின்றனர். பஞ்சாயத்தில் பொன்னருவிக்கு வருடத்திற்கு ஒருமுறை பொங்கல் வைக்க முடிவு செய்கின்றனர். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவன் 'எப்படியோ பறச்சியை கடவுளாக்கிட்டீங்க' என்று கூறுகிறான். பொன்னருவி கடவுளாக உருமாறுகிறாள்.

பொன்னருவி இறந்த பின்பு நாகம்மாள் பொட்டைக்குளத்தில் கிடையாக கிடக்கிறாள். பைத்தியம் பிடித்தவள் போல் அழைகிறாள். இருபது வருடமாக பொட்டைக்குளம், பொன்னருவி கோவில் என்று காலத்தை கழிக்கிறாள். பொன்னருவி கோவிலை சுற்றி மரங்கள் நட்டியவள் நாகம்மாள், மரங்களை பராமரித்தவள் நாகம்மாள். சிறுகதையானது மீண்டும் முதலில் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறது.

பொங்கல் வைக்கும் ஒவ்வொருவரின் வாயிலிருந்தும் 'இன்று மழை வருமா?' என்று கேட்ட வண்ணம் இருக்கிறது. சிலர் பொன்னருவியை திட்டுகின்றனர், பொன்னருவி கடவுள் என்றும் கடவுள் நம்மை சோதிப்பதாகவும் கடவுளை திட்டியவர்களை சமாதானப்படுத்தினர். ஜோசியக்காரன் இன்று மழை வராது என்கிறான். சாமி வந்து ஆடிய பெண்ணிடம் 'இன்று மழை வருமா?' என்று கேட்டால் வாயில் பூட்டு போட்டது போல் மெளமாக இருக்கிறாள். பொங்கல் வைத்து முடித்தவர்கள் மழை வரவில்லை என்ற கவலையுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனர். சிலர் மரத்தின் நிழலில் அமர்ந்து வானத்தை பார்த்த படி இருக்கின்றனர். சிறுகதையின் கடை வரியானது 'மேற்கே வானில் இருள் பரவ ஆரம்பித்திருந்தது' என்று முடிகிறது.

ஆறுமுகம்

ஆறுமுகம் எழுத்தாளர் இமையத்தின் இரண்டாவது நாவல். இந்நாவலில் அவர் எடுத்திருக்கும் கதைக்களம் முதல் நாவலான கோவேறு கழுதைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நாவலானது பாண்டிச்சேரியில் செக்குமேடு என்ற இடத்தில் பாலியல் தொழிலாளிகளுடன் வசிக்கும் ஆறுமுகம் என்பனின் கதை.

தனபாக்கியம் ஆறுமுகத்தை அழைத்துக்கொண்டு பூத்தூர் கிராமத்திற்கு செல்கிறாள். ஆறுமுகம் அப்போது சிறுவனாக இருக்கிறான். தனபாக்கியம் ஆறுமுகத்தின் அம்மா. தனபாக்கியத்தின் கணவன் ராமன் பாண்டிச்சேரி ஆரோவில்லில் கட்டட வேலையின் போது கீழே விழுந்து இறந்துவிடுகிறான். கணவன் இறந்த பின் கிருஷ்ணபுரத்திலிருந்து கிழம்பி அப்பாவுடன் சென்று வாழ நினைத்து பூத்தூர் கிராமத்திற்கு செல்கிறாள் தனபாக்கியம்.

தனபாக்கியத்தின் அப்பா கூடை பின்னும் தொழில் செய்கிறார். அவருக்கு கூடை பின்னுவதை தவிர வேற தொழில் தெரியாது. தனபாக்கியத்தின் அப்பாவை ராமன் முதலில் பார்த்தது கூடை வாங்க சந்தைக்கு போயிருந்த போது. ராமனை பார்த்த உடனே தனபாக்கியத்தின் அப்பாவிற்கு ராமனை பிடித்து விடுகிறது. ராமனுக்கும் தனபாக்கியத்தை பார்த்ததும் பிடித்துப்போகிறது. திருமணம் முடிந்த சில நாட்கள் ராமனுடன் முரண்டு பிடிக்கிறாள் தனபாக்கியம். அவன் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து பக்கத்து வீடு எதிர்த்த வீடென்று எங்காவது சென்று விட்டு அவன் வெளியே சென்ற பின்பு வீடு திரும்புகிறாள். ராமன் எப்போதும் வீட்டிற்கு போவதை விட அன்று சற்று முன்னாதகவே வீட்டிற்கு செல்கிறான். ராமன் தன்னை பார்த்து ஒட முயற்சிக்கும் தனபாக்கியத்தை தடுத்து கலவி புரிகிறான். ஊரிலே திமிர் பிடித்த பெண்ணாக தனபாக்கியம் இருந்தாலும் ராமனிடம் அவளின் திமிர் செல்லுபடியாகவில்லை. ஆறுமுகம் தனபாக்கியத்தின் காதை கடிக்கும் போதெல்லாம் அவளுக்கு ராமனின் நினைவுவருகிறது. முழுமையாக காலி செய்யாத கிருஷ்ணபுரத்து வீட்டை காலி செய்து வர எண்ணி ஒரு நாள் பகல் பொழுதில் கிருஷ்ணபுரத்துக்கு செல்கிறாள் தனபாக்கியம்.

ஏனோ மீண்டும் பூத்தூர் திரும்பாமல் கிருஷ்ணபுரத்திலே தங்கிவிடுகிறாள். தனபாக்கியத்தின் அப்பா வாரத்தின் இரண்டு நாள்கள் தனபாக்கியத்துடன் தங்கிவிட்டு திங்கள்கிழமை பூத்தூர் சென்று தன் அன்றாட வேலையை செய்கிறார். பக்கத்துவீட்டு கிழவியின் பேச்சை கேட்டு ஆரோவில்லில் வேலைக்கு செங்கிறாள். அவளின் ஓரே லட்சியம் ஆறுமுகத்தை நன்றாக படிக்க வைக்க வேண்டும். தன்னைப்போல் அவன் தினக்கூலி செய்து கஷ்டப்படக்கூடாதென்று கருதியே ஆரோவில் செல்கிறாள். கிருஷ்ணபுரத்திலிருந்த வீட்டை விற்ற பணத்தில் பாண்டிச்சேரியில் வீடு எடுத்து தன்மகனுடன் தங்குகிறாள். ஆறுமுகத்தை நல்லதொரு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறாள். பள்ளியிலிருந்து சீக்கிரமே திரும்பிய ஆறுமுகம் வீட்டின் கதவு திறந்திருப்பதை பார்த்து ஆச்சர்யப்படுகிறான். எப்போதும் பள்ளி முடிந்து ஆறுமுகம் வீட்டிற்கு வந்த வெகுநேரம் கழித்து வீட்டிற்க்கு வருவாள் தனபாக்கியம். வீட்டின் கதவை தள்ளி உள்ளே சென்ற ஆறுமுகம் தனபாக்கியம் ஆரோவில்லில் வேலை பார்க்கும் வெள்ளைக்காரன் ஒருவனுடன் கலவியில் இருப்பதை பார்க்கிறான். அதிர்ச்சியிலிருந்து வீட்டை விட்டு வெளியே வந்த ஆறூமுகம் கால் நடந்த பாதையில் செல்கிறான்.

ஆரோவில் பற்றி இந்நாவலில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. ஆரோவில்லை சேர்ந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரோவில்லை சுற்றியிருக்கும் கிராமங்களின் நிலங்களை பறிமுதல் செய்து கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராமன் ஆரோவில் தியான மண்டபம் கட்டட வேலையின் போது இறந்தது, தனபாக்கியம் ஆரோவில்லில் வேலை செய்பவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்வதென அடுத்தடுத்த நேரடியான குற்றங்கள் ஆரோவில்லின் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.

வீட்டை விட்டு வெளியேறிய ஆறுமுகம் பாண்டிச்சேரியின் ஒவ்வொரு இடமாக சுற்றி அலைகிறான். கடைசியாக தர்மமூர்த்தியிடம் வந்து சேர்கிறான். தர்மமூர்த்தி ரிச்சா இழுப்பவன். பகல் முழுவதும் ரிச்சா இழுப்பான். கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் சாராயக்கடைக்கு சென்றுவிடுவான். பாக்கியத்தின் கடையில் தோசையும், கரியும் வாங்கிக்கொண்டு செக்குமேட்டிற்கு சின்னப்பொண்ணு குடிசைக்கு தூங்கச்செல்வான். ஆறுமுகம் தர்மமூர்த்தியுடன் சேர்ந்து ரிச்சா இழுக்கிறான். தூங்குவதற்கு சின்னப்பொண்ணு வீட்டிற்கு செல்கிறான்.

சின்னப்பொண்ணு ஒரு பாலியல் தொழிலாளி. செக்குமேடு பாலியல் தொழிலுக்கு பெயர் போன இடம். இரவு நேரமாகநேரமாக செக்குமேட்டில் ஆண்களின் கூட்டம் அதிகரிக்கிறது. ஒவ்வொரு குடிசையினுள்ளும் வெளிச்சம் குறைவான காடாவிளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. செக்குமேடு சுகாதாரமற்ற இடம், குடிசையை சுற்றி சாக்கடை நிறைந்திருக்கும், மூத்திரவாடை அடிக்கும், இரவானால் சிறுபிள்ளைகள் பார்ட்டியை பிடித்துவந்து குடிசைக்குள் விட்டுச்செல்லும், பேசிய தொகைக்கு குறைவாக தரும் ஆண்களை திட்டிய படி குடிசையின் வெளியே வந்து கூச்சலிடும் பெண்கள், தன்னை இளமையாக காட்டிக்கொள்ள முகத்தில் அளவிற்கு அதிகமாக பவுடர் அப்பிக்கொண்டு நிற்கும் பெண்களின் முகத்தில் டார்ச் லைட் அடித்து அதனை கண்டுபிடிக்கும் ஆண்கள் என பலதரப்பட்டோர் செக்குமேடை சுற்றி திரிகின்றனர்.

ஆறுமுகம் ரிச்சா வேலையிலிருந்து விலகி அட்டை கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்கிறான். ஆறுமுகத்தை வசந்தா வேலைக்கு சேர்த்து விடுகிறாள். அங்கேயும் சில மாதங்களே வேலை செய்கிறான். அட்டை கம்பெனியிலிருந்து வெளியேறி குருமூர்த்தி என்ற சமையல்காரனிடம் வேலைக்கு செல்கிறான். எங்கு வேலை பார்த்தாலும் தூங்குவதற்கு செக்குமேட்டிற்கு சென்று விடுவான். திருமண மண்டபத்தில் குருமூர்த்தி ஆறுமுகத்தை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கிறான். அதனை மறுத்த ஆறுமுகம் மண்டபத்தை விட்டு வெளியேறி செக்குமேட்டிற்கு வருகிறான். செக்குமேடை சுற்றி ஜனக்கூட்டம் அலைமோதுகிறது. போலீசும் செக்குமேடை சுற்றி அதிகம் தெரிகின்றனர். ஏதோ நடக்கக்கூடாதது நடந்ததென நினைத்த ஆறுமுகம் செக்குமேட்டினுள் செல்லும்போது வசந்தா சின்னப்பொண்ணுவின் உடல் செக்குமேட்டின் சாக்கடையில் கிடப்பதாக ஆறுமுகத்திடம் சொல்கிறாள்.

நாவல் முழுவதும் செக்குமேடு, முத்தமிழ் நகரில் வாழ்வர்களின் வாழ்க்கையை தெளிவாக கூறுகிறது. ஆறுமுகம் செக்குமேட்டிற்கு சென்றிருந்த போது பெண் ஒருத்தி அவனை இழுத்து குடிசையினுள் தள்ளிவிடுகிறாள். குடிசையினுள் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை பார்க்கிறான். அந்த பெண் ஆறுமுகத்தின் அருகில் வந்தவுடன் அவள் முகம் தெளிவாக தெரிகிறது. அவள் ஆறுமுகத்தின் அம்மா தனபாக்கியம். ஆறுமுகம் தனபாக்கியத்தை பார்த்தவுடன் அழுகிறான். மீண்டும் தன் மகனை பார்க்க மாட்டோமா என்று நினைத்த தனபாக்கியம் ஆறுமுகத்தை பார்த்தவுடன் அவளும் அழுகிறாள். இருவரும் வழியில் ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளாமல் நடக்கின்றனர். ஆறுமுகம் தனபாக்கியத்தை வசந்தாவின் வீட்டிற்கு அழைத்து செல்கிறான். அவனும் அன்றைய இரவு அங்கேயே தங்கி விடுகிறான். ஆறுமுகம் மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது தனபாக்கியம் ஃபேனில் தூக்குமாட்டி தொங்குகிறாள்.

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768