இதழ் 18 - ஜூன் 2010   கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

மேலைநாட்டில் சமீபத்தில் நடந்த ஓர் இலக்கிய ஆய்வில் ஏன் அதிகமான பெண் எழுத்தாளர்கள் நாவல் என்கிற விரிந்த தளத்தை திட்டமிட்டே தவிர்த்து விடுகிறார்கள் என்கிற கருதுகோளை முன்னிறுத்தி விடை தேட முற்பட்டார்கள்.

அவர்கள் கண்டறிந்த முடிவு நம் நாட்டு இலக்கியச் சூழலோடு பொருத்திப் பார்க்க ஆச்சரியப்படும் படியான சில ஒற்றுமைகள் தெரிந்தால் நாமும் அது அறிந்து யோசித்தோம்.

அங்கே இத்தகைதொரு தேடல் ஆர்வத்தை தூண்டிய நிகழ்வாக அடையாளப்படுத்துவது சமீப காலங்களில் சிறுகதைக்கான மிக முக்கியமான பரிசுகளையும் விருந்துகளையும் பெண் எழுத்தாளர்களே தட்டிச் சென்றதின் விளைவாய் அங்கே பரவிய அதிர்வு அலைதான் என்கிறார்கள்.

2009 மே மாதத்தில் சிறுகதை கலை வடிவத்தின் தற்கால மேதை என வர்ணிக்கப்படும் கனடியப் பெண் எழுத்தாளரான அலிஸ் மன்றே-வை (Alice Monroe) பேட்டி காண புலம் பெயர்ந்த எழுத்தாளரான அ. முத்துலிங்கம் அவர்கள் பட்ட பாடும், ஒரு சிறுகதை எழுதுவதற்கென்றே தனது பூர்வீக நாடான அயர்லாந்துக்கு புறப்பட்டுப் போய் ஒரு ஆறுமாத காலம் உழைத்துச் செதுக்கிய சிறுகதையை இறுதியில் அதில் இன்றும் எனக்கு பூரண திருப்தியில்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி கிடப்பில் போட்ட அதே எழுத்தாளர்தான் - அந்தப் பரிசை வென்றார்.

மேன் பூக்கர் (Men Booker) பரிசான 60,000 பிரிட்டிஷ் பவுன் (RM 300,000) அவரது ஒட்டுமொத்த சிறுகதை இலக்கிய வடிவத்துக்கான அன்னாரின் உயரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு ‘Practically Perfect’ என்கிற பரிசு நீதிபதிகளின் ஒருமித்த பாராட்டு முத்திரையோடு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் கடந்தாண்டின் மத்தியில் BBCயின் தேசிய சிறுகதை பரிசுக்கான இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்ற முதல் ஐந்து நிலை படைப்புகளும் பெண் எழுத்தாளர்களுடையவை என்கிற செய்தி கசிந்தபோது - உலக சிறுகதை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு உண்டானது. அந்த ஐந்து படைப்புகளில் டிசம்பர் 7இல் Kate Clanchy என்கிற பெண் எழுத்தாளர்களின் The Net Dead and the Saved என்கிற படைப்பு முதற் பரிசு வென்றது.

அந்த டிசம்பர் 2009இல் ஆப்பிரிக்க ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான பெதினா கப்பா (Petina Gappa) தனது புனைவு கதைக்காக தி கார்டியன் (The Guardian) பத்திரிகையின் உயரிய இலக்கிய விருதை An Elegy for Easterly என்கிற தனது சிறுகதை தொகுப்புக்காக வென்றார்.

இப்படி அதிகமான பெண்கள் இந்த சிறுகதைத் துறையில் ஆர்வம் காட்டுவதறற்கு - அது ‘சுலபமான’ இலக்கிய வடிவம் என்கிற வாதம் எடுபடுமா?

அதற்கு விடையளிக்கும் விதமாக James Lasdon (இங்கிலாந்தில் தேசிய அளவில் சிறுகதைக்கான பரிசு பெற்றவர்) இப்படிக் கூறுகிறார் - நடைமுறை வாழ்வின் குறுக்கீடு அதிகம் மிக்க நெருக்கடிகளோடு எழுதுவதற்கு சிறுகதை என்கிற குறுகிய வடிவம் நாவல் என்கிற பரந்த பரப்புடைய இலக்கிய வடிவத்தை விடவும் வசதியானது என நான் நினைக்கவில்லை.

தனிப்பட்ட முறையில் ஒரு இலக்கிய வடிவமாக சிறுகதை வடிவத்தையே பிற வடிவங்களை விடவும் சிரமமானதாகவும் சவால்மிக்கதாகவும் உணருகிறேன்.

அவர்கள் மேற்கொண்ட அந்த ஆய்வின்படி - பெண்கள் பெரும்பாலும் பன்முக பணியாளர்களாக - வீடு உத்தியோகம் கணவன் குழந்தைகள் என்கிற பன்முனைகளில் தங்களை இருத்தி இயங்குவதான் - இந்த நடைமுறை வாழ்வு அவர்களுக்கென ஒதுக்கித் தந்திருக்கும் கால வெளி என்பது ஒரு தொடர் ஓட்டமாக இல்லாமல் ஆங்காங்கே துண்டாடப்பட்ட சிறுசிறு துண்டுகளாக அமையப் பெற்றுள்ள காரணத்தால் அந்த துண்டாடப்பட்ட கால வெளிக்குள் தங்களை லாவகமாய் பொருத்தி இயங்க ஏதுவான தளமாக இந்த சிறுகதை வடிவம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

இதே கருதுகோளை முன்னிறுத்தி நம் நாட்டு பெண் எழுத்தாளர்களை நோட்டமிட இயலுமா என்கிற கேள்வி எழுந்தது.

நமது மூத்த பெண் எழுத்தாளர்களான ந. மகேஸ்வரி, பாவை, க. பாக்கியம், வே. இராஜேஸ்வரி, சு. கமலா போன்றோரின் இளமைக் கால உரைநடை செயல்பாடுகளோடு ஒப்பிட இன்றைய நம் இளைய தலைமுறை பெண் உரைநடை எழுத்தாளர்களாக அடையாளம் காட்டத் தொடங்கி நம்பிக்கையும் அளிக்கும் விதமாக எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் யோகி, மணிமொழி, தோழி (குறிப்பாக வல்லினத்தில்) போன்றோரின் சிறுகதை மேக மூட்டமாகவே மறைந்து கிடக்கிறது. அவ்வப்போது சிறு பத்திகளை பதிவு செய்வதோடு அவர்களின் உரைநடை பணி ஒரு மிகச் சிறிய வட்டத்துள் முடங்கிக் கிடக்கிறது.

இவர்களின் அதிகபட்ச கவனமும் கவிதையின் பால் இருப்பதால் இந்த எதிர்மறை நிலையோ என்கிற ஐயப்பாடு எழுவதை தவிர்க்க இயலவில்லை.

நிஜத்தைச் சொல்வதனால் நமது நவீன இளைய பெண் எழுத்தாளர்கள் பலரும் தங்களை ஒரு கவிஞராக அடையாளம் காட்டிக் கொள்வதிலேயே அதிக நாட்டம் கொண்டுள்ளதான ஒரு பரவலான தோற்றத்தை காண முடிகிறது.

கவிதை கவுன்டரை முற்றுகையிட்டு நீண்டதொரு க்யூவில் ஏராளமான பெண் கவிஞர்கள் மல்லுக்கு நிற்கிற நிதர்சன நிலையை ஓரளவு நம் இலக்கிய செயல்பாடுகளை கவனித்து வரும் எவரும் உணர்வர். சமன்பாடு கொண்ட ஒரு இலக்கிய வளர்ச்சிக்கு இது ஒரு ஆரோக்கியமற்ற நிலை என்பது நமது கருத்து.

இதற்கான காரணம் யாது? மேலைநாடுகளில் கண்டறியப்பட்ட அந்த உண்மைகளை நம் இளைய தலைமுறை பெண் எழுத்தாளர்களோடு பொருத்தி ஒப்பீட்டளவில் கணிக்க முயன்றோம்.

அதிநவீனமயமாகிவிட்ட வாழ்வில் அதிகப்பட்ட பன்முனை நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நமது இளைய பெண் எழுத்தாளர்கள் நமது கடந்த கால பெண் எழுத்தாளர்கள் எதிர்கொண்ட எழுதுவதற்கான சூழலிருந்து எந்த வகையில் வேறுபடுகின்றனர் என்பதை சற்றே கூர்ந்து நோக்க ஒரு உண்மை புலனாகியது.

இலக்கிய அறிவு பெருக்கத்திற்கு தேவையான வாசிப்புக்கு உதவும் போதுமான உபகரணங்கள் / படைப்பாக்கங்களை ஏந்திச் செல்ல போதிய களங்கள் / தெளிவான வழிகாட்டல்கள் / ஊக்குவிப்புகள் என்கிற அதிமுக்கிய விஷயமெல்லாம் பற்றாக்குறையாக இருந்த ஒரு காலக்கட்டத்தில் நமது மூத்த பெண் எழுத்தாளர்களின் செயல்பாடு நிறைவளிக்கும் விதமாக இருந்துள்ளதை எவரும் மறுக்க இயலாது. அத்தகையதொரு பிரகடனத்தை நமது இளம் தலைமுறை பெண் எழுத்தாளர்களைப் பார்த்து செய்ய இயலுமா என்பது கேள்விக்குறிதான்.

பல் ஊடகங்களின் பெருக்கத்தால் இலக்கியத் தேடலுக்கும் வாசிப்புக்கும் துரித வளர்ச்சிக்கும் ஏதுவான ஒரு சாதகமான சூழல் நிலவுகின்ற இன்றைய காலக்கட்டத்தில் அதனை உள்வாங்கி கைப்பற்றி மேலெழுந்து செல்வதற்கான குறைந்தபட்ச முஸ்தீபைக்கூட அவர்களிடம் காண இயலாதது ஒரு பெருங்குறையே.

கவிதையின்பால் அது மிகவும் சிக்கலான ஆக உயர்ந்த இலக்கிய வடிவம் என்பதை நினைவில் கொண்டு இவர்களில் பெரும்பாலோர் காட்டும் அபரிமிதமான ஆர்வம் மேலைநாட்டுப் பெண்கள் சிறுகதையின்பால் காட்டும் ‘கால நெருக்கடி’ போன்றதொரு காரணத்தால் இருக்கலாமோ என கூறத் தோன்றுகிறது.

மிகவும் குறுகிய ஆனால் முழுமைபெற்ற வடிவமாக கவிதை இருப்பதால் தங்களுக்கு இன்றைய நவீன சூழல் வழங்கியுள்ள துண்டாடப்பட்ட கால வெளிக்குள் சுலபமாக பொருந்தி செயல்பட ஏதுவானதொரு வடிவமாக அதனை ப்ரக்ஞைபூர்வமாக தெரிவு செய்கிறார்களோ என கேட்கத் தோன்றுகிறது.

அந்தக் கருத்தை அவர்கள் முன்வந்து ஆமோதிக்கும் பட்சத்தில் நம் இலக்கிய வளர்ச்சிக்குத் தேவையான அடுத்தக் கட்ட பாய்ச்சலுக்கு நாம் இன்னும் வெகுகாலம் காத்திருக்க நேரலாம்.

கூடுதலான கால அளவையும் உழைப்பையும் கோரும் பிற இலக்கிய வடிவங்களின் மேலான அவர்களின் கவனக் குவிப்பை நீர்த்துப்போகச் செய்யும் எதிர்மறை சக்தியாக ‘இந்தக் கவர்ச்சி’ பரிணாம வளர்ச்சி அடையும் தருணம் அவர்கள் எதிர்பாராத ஒரு விபத்தாக எப்போது வேண்டுமானாலும் நிகழ்ந்துவிடக்கூடும்.

குறுகிய வடிவம் குறைவான கால அளவே தேவைப்படும். ஒரு கவிதை எழுத ஆறு மாத காலம் எடுத்துக்கொள்ளும் தீவிர கவிஞர்களும் உண்டு. அவர்கள் விதிவிலக்குகள். நாலைந்து துணுக்குத் தோரணங்களைக் கட்டி நமது ஜனரஞ்சக பத்திரிக்கையில் தொங்கவிட்ட மறுவாரமே உங்கள் கடிதத்தில் ‘அன்புள்ள கவிஞருக்கு’ என்கிற கவிஞர் அடைமொழி.

இப்படியான சில கவர்ச்சி அம்சங்கள் தொக்கியுள்ள ஒரு இலக்கிய வகைமையாக நம் கவிதை உலகம் குறுகிக் கொண்டிருக்கிறதோ என்கிற ஐயப்பாட்டை கிளறிவிடும் ஒரு போக்கை சமீப காலமாக நம் ஊடகங்களில் பரவலாக காண முடிகிறது.

இந்த நிலை ஒரு ஆரோக்கியமற்ற இலக்கியச் சூழலுக்கு வழிவிட்டுவிடும் என்கிற நியாயமான அச்சம் எழுகிறது. ஒரு படைப்பாளனின் தீவிர பன்முக எழுத்தாற்றலை வெளிக்கொணரும் ஆக்கச் சக்திகளை இத்தகைய மலினப்பட்ட எதிர்மறை அபிலாஷைகள் மழுங்கடித்து விடலாம்.

ம. நவீன், சு. யுவராஜன், மஹாத்மன், கே.பாலமுருகன், பா. அ. சிவம் போன்றதொரு தீவிர உரைநடை இளைய தலைமுறை பெண்களிடையே உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.

இத்தருணத்தில் உங்கள் மனதில் இப்படியொரு கேள்வி தலைதூக்கலாம். உரைநடையின்பால் எங்கள் கவனம் தீவிரப்படும் பட்சத்தில் எங்களுக்கும் மேலைநாட்டுப் பெண்களுக்கு வழங்கப்படுவது போன்ற உயரிய பரிசுகள் விருதுகள் எல்லாம் சாத்தியமா?

உண்மையைச் சொல்வதனால் அதற்கான கதவுகள் அகலத் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பொற்காலத்தில் நீங்கள் எழுதத் துவங்கியுள்ளீர்கள் என்பதை மட்டும் நம்மால் உறுதியிட்டுக் கூற இயலும்.

நியாயமான கேள்விதான். புதிதாக எழுத்துலகில் காலடி எடுத்து வைத்துள்ள எவருக்கும் இயல்பாக எழக்கூடிய ஐயம்தான். அதிலும், ஆணாதிக்கம் மிகுந்த எழுத்துலகில் பெண்களுக்கு இத்தகைய சந்தேகம் வருவது நியாயமானதொன்றே.

ஆனால், அத்தகு ஐயப்பாடுகள் இனி செல்லு படியாகாது என்பதே நமது அறிவுறுத்தல்.

ஆமாம்! உங்கள் தலையிலும் பரிசு மழை பொழிய காலம் கனிந்து விட்டது! ஒரு பரிசல்ல! ஒரே கதைக்கு ஒன்பது பரிசுகள்!

ஆச்சர்யப்பட்ட வேண்டாம். நாம் சொல்வது அத்தனையும் உண்மை.

வலம் வருக punniavan.com.my / saibeer.com.my.

முன்னெச்சரிக்கை இந்த அகப்பக்கங்களில் ஏடாகூடமான சில வழிமுறைகளும் குறிப்பாக Recycle என்கிற அதிநவீன உத்திமுறை ஒன்று குறித்து விலாவாரியான செயல்முறை விளக்கங்கள் உள்ளது என்பதால் வழிமுறைகளை சற்றே நிதானத்துடன் தேர்வு செய்வது அவசியம்.

அப்படி ஒருவேளை உங்களில் யாரேனும் ஒருவர் பரிசுகளின் மேல் கொண்ட கட்டுக்கடங்காத அதிகமாக விரகதாபத்தில் அந்த ஏடாகூடமான வழிமுறைகள் எதனையேனும் பின்பற்ற நேர்ந்து தற்செயலாக பிடிபட நேர்ந்தால் மீண்டும் அதே அகப்பக்கங்களுக்குத் திரும்பிப் போங்கள்.

punniavan.com.myஇல் உங்களின் பயன்பாட்டிற்கெனவே சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்டு உலவ விடப்பட்டிருக்கும் ‘நான் திருச்சிக்கு பக்கோடா வாங்க போன’ தெருக்கூத்தை பலமுறை வாசிக்கவும்.

அதன்பின் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி அதனையொட்டியே நீங்களும் ஒரு தன்னிலை விளக்கத்தை முன்கூட்டியே தயார் செய்து கணினி கோப்பில் சேகரம் செய்து கொள்ளுங்கள்.

தலைப்பு : கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை. தன்னிலை விளக்கம் - எனக்கு கல்யாணம் நிச்சயமாகி அதற்கென பட்டுப்புடவை வாங்கி வர நான் சோவியத் மண்டலத்திலுள்ள கிர்கிஸ்தான் புறப்பட விமான நிலையம் நோக்கி காரில் பறந்து கொண்டிருந்தேன்.

அத்தருணம், ஜலதோஷம் பீடித்திருந்த மூக்கு அச் அச் என்று தும்மல் போட டம்பப் பைக்குள் கைக்குட்டைக்குத் துழாவினேன். அது இல்லாத ஏமாற்றத்தில், சுற்றுமுற்றும் பார்க்க கண்ணில் பட்டது அந்த பழைய பேப்பர். அதில் கொட்டை எழுத்தில் சிறுகதைப் போட்டிக்கான இறுதி அறிவிப்பு. என்ன செய்வேன்?

மனம் அணலில் விழுந்த புழுவாய்த் துடித்தது. தமிழ் இலக்கிய உலகுக்கு நாம் ஆற்ற வேண்டிய அரும்பணிகளில் ஒன்றை தவறவிட்டு விட்டோமே என்கிற குற்ற உணர்வு மேலோங்க கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.

மனதைத் தேற்றிக் கொண்டு கணினி கோப்பைத் திறந்தேன். அதில் எனது மிகச் சிறந்த ஆயிரமாயிரம் சிறுகதைகளின் அணிவகுப்பு. திக்குமுக்காடிப் போனேன். கண்களை மூடி எனது இதய தெய்வமான இராஜேந்திர குருமகராஜை தியானித்து கோப்பிலிருந்து ஒரு கதையை உருவினேன். (தலைப்பை மட்டும் மாற்றிவிட்டு) விலாசத்தை எழுதி கார் சன்னலைத் திறந்து காற்றில் பறக்கவிட்டேன்.

என்ன இது கூத்து? இதை எல்லாம் நம்புவதற்கு கூட இங்கு ஆட்கள் உண்டா என்கிறீர்களா? ஐயம் வேண்டாம். இன்றைய நம் தமிழ் இலக்கிய உலகம் என்பது சர்க்கஸ் கோமாளிகள் முகாம் அமைத்திருக்கும் உன்னத கலைக்கூடம்! நம்புவார்கள்!

மதிப்பிற்குரிய இலக்கியப் போட்டிகளை கேலிக் கூத்தாக்கி உங்களோடு கைகோர்த்து கபட நாடகமாடிய போட்டியின் ஏற்பாட்டாளர்களான கமிஷன் ஏஜென்டுகளையும் - இங்கே எதுவுமே நடவாதது போல் கையைக்கட்டி வாயைப்பொத்தி விலகி நின்று வேடிக்கைப் பார்த்திருக்கும் எழுத்துலக பேடிதகளையும் - ஒட்டு மொத்தமாக மொட்டையடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி நாலு முச்சந்திக்கு இழுத்து வந்து நிறுத்தி - இந்தச் சமூகமே காறி உமிழ - உங்களுக்கு நாளை அது சிறந்ததொரு ஆயுதமாக பயன்படும்!

புண்ணியவானின் கை லாவகத்தில் - தமது சகாக்களுக்கு எதிராகவே அது புரிந்துள்ள சாகசத்திற்கு நிகராக!

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768