இதழ் 18 - ஜூன் 2010   கவிதை:
லதா
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

குருஷேத்திரம்

பேரலையில் சீரழிந்த கடல்
அயர்ந்திருந்தது
நாரைகள் மீன் பிடித்துக்
கொண்டிருந்த அந்நேரத்தில்
போர் முடிவானது

களப் பலிக்கு அரவான்
அடையாளம் காணப்பட்டான்
ஆங்கிலம் பேசினாலும் தமிழன்

கணம் பிசகினாலும்
போர் பிழைக்கும்

நீச்சல்குளத்தில் அரவான்
கதையை முடித்தபின்
பாண்டவர் தலைவன் பதவியேற்பு

தாயம் ஆடிக் காலம் கடத்திய
நொண்டிச் சகுணியைக்
கொன்றுவிட்டு
நாள் குறித்தனர்

கௌரவரும் பாண்டவரும்
பிணைந்திருந்த களத்தில்
உலகப் பேரரசர்களும் இணைந்தனர்

எறிபடைகள்
நிலவெடிகள்
உந்துகணைகள்

செத்துப் பிழைத்த கர்ணன்
வெறி தீர்த்தான்

போர் போர் போர்
18 மாதங்கள்

வானமும் பூமியும் நீரும் காற்றும் விரட்ட
பத்ம வியூகத்திற்குள்
மக்கள்
மந்திரமறந்த அபிமன்யூக்கள்
பீரங்கி வாயில் புகுந்தோடினர்
இறந்தவரையும் இழுத்தழித்தனர்
சக்கரத்தில் சிக்கியவர்கள்

வெடித்துச் சிதறிய கணவனுக்காய்
இனமழித்தாள்
திரௌபதை

வெற்றி மேல் வெற்றி
பஞ்சு மெத்தையில் படுத்தபடி
நோன்பிருந்த
பிதாமகர்
முரசு கொட்ட

ஆண்களும் பெண்களுமாய்
ஐந்து பேர்
கௌரவர் சபையில்
முடி சூடினர்

படையோடு கர்ணன்
சிறைவாசம்

கடல்கள் கடந்து
அடையாளம் தேடிச் சிதைக்கும்
கூலிப் படைத் தலைவர்களாயினர்
அர்ஜுனர்கள்

புதையல் தோண்டப் புறப்பட்டனர்
தருமர்கள்

புத்தராய் பிறந்த கிருஷ்ணர்
பிசாசாய்ப் போனார்
வெட்டுண்ட கடைசிக் கரங்களையும்
புதைக்கப்பட்ட மீதி உயிர்களையும்
தின்று கொன்றே
அவர் கீதையைக் கேட்ட
தேவதைகள்
ஊர் பிடிக்கத் தொடங்கின.

பிள்ளைகளை நாடு தின்னக்
கொடுத்த அன்னையரின்
பஞ்சடைந்த கண்களிலும்
அவர்களின் கோணிப் பைக்குள்
நிறைந்துள்ள
குழந்தைகளுக்கான கதைகளிலும்
எக்களிக்கிறது
இன்னும் ஏவப்படாத
பிரம்மாஸ்திரம்

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768